Reliance Jio: 198 ரூபாயில் வரம்பற்ற 5G டேட்டா... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

Tue, 20 Aug 2024-11:41 am,

மொபைல் ரீசார்ஜ் கட்டண உயர்வு: தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு ஷார்ட் கொடுத்த பிறகு, ஏர்டெல் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும், கட்டண உயர்வை அறிவித்தன. எது எடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தை நோக்கி மக்கள் படையெடுக்க தொடங்கினர்.

 

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்: பிஎஸ்என்எல் நிறுவனமும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்து, தனது 4ஜி நெட்வொர்க்கை வலுப்படுத்த துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு, வாடிக்கையாளர்களை ஈர்க்க புது புது திட்டங்களையும் அறிவித்து வருகிறது.

 

ஜியோவின் மலிவான திட்டம்:  வாடிக்கையாளர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்க்க ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 200 ரூபாய்க்கும் குறைவான கட்டணம் கொண்ட, மலிவான 5ஜி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டாவுடன், பிற நன்மைகளும் உண்டு

 

ரிலையன்ஸ் ஜியோவின்198 ரூபாய்க்கான திட்டத்தில் பயனர்களுக்கு தினமும் இரண்டு ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். ஜியோவின் 5ஜி இணைப்பு உள்ள பயனர்களுக்கும், 5G மொபைலை பயன்படுத்துபவர்களுக்கும், வரம்பற்ற 5G டேட்டா கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.198 பிளான்: ரிலையன்ஸ் ஜியோவின்198 ரூபாய்க்கான இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்களாகும். மேலும் இதில் வரம்பற்ற குரல் அழைப்பு என்னும் அன்லிமிடெட் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி ஆகிய நன்மைகளும் உண்டு

ஜியோ செயலிகளுக்கு இலவச அணுகல்: டேட்டா காலிங் தவிர, ஜியோ சினிமா (Jio Cinema) , ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட்  (Jio Cloud) ஆகியவற்றை இலவசமாக அணுகும் வசதியும் இந்த திட்டத்துடன் கிடைக்கும்

 

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள்: ஜியோ 5ஜி சேவைக்காக ரீசார்ஜ் செய்யப்படும் திட்டங்களில் ரூ 349 திட்டமும் சிறப்பானது. ஏனென்றால், இதில் 28 நாள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இதுபோக 4ஜி டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 

 

ஜியோ 199 Vs ஏர்டெல் 199 திட்டம்: ரூ.200க்கும் குறைவாக ரூ.199 திட்டம் ஏர்டெல்லிலும் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் வரம்பற்ற 5G டேட்டாவின் பலன் கிடைக்காது. எனினும் இதில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய பலன்களை பெறலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link