குறைந்த செலவில் சிறந்த E-Scooter-களை வாங்க முடியுமா? நிச்சயமாக முடியும்!! முழு பட்டியல் இதோ

Tue, 04 Jan 2022-6:46 pm,

Hero Electric Flash-ன் ஆரம்ப விலை ரூ.46640 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.59640 ஆக உள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 85 கிலோமீட்டர் வரை செல்லும். இந்த ஸ்கூட்டரில் 250W மோட்டார் மற்றும் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. (Photo: Hero)

ஹீரோ எலக்ட்ரிக் டேஷின் ஆரம்ப விலை 50 ஆயிரம் ரூபாய் ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.62,000 ஆக உள்ளது. இந்த மின்சார வாகனம் மூன்று வகைகளில் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் இது 60 கிமீ தூரம் பயணிக்கும். இதில் 250V மோட்டார் உள்ளது. இது லித்தியம்-அயன் பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. (Photo: Hero) 

 

ஆம்பியர் மேக்னஸின் ஆரம்ப விலை ரூ.49,999 ஆகும். இதன் விலை அதிகபட்சமாக சில இடங்களில் ரூ.76,800 வரை செல்கிறது. இது 84 கிமீ சவாரி வரம்பை (Riding Range) வழங்குகிறது. இந்த மின்சார ஸ்கூட்டரின் எடை 82 கிலோ ஆகும். இதில் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரின் டாப் ஸ்பீட் 50 கி.மீ ஆகும். (Photo: Ampere)

Avon E ஸ்கூட்டரின் ஆரம்ப விலை சுமார் 45 ஆயிரம் ரூபாயாகும். இது 65 கிமீ சவாரி வரம்பை வழங்குகிறது. இது 215w மோட்டார் மற்றும் VRLA வகை பேட்டரியைக் கொண்டுள்ளது. (Photo: Bikedekho.com)

மாற்றக்கூடிய பேட்டரி ஆப்ஷனுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மின்சார ஸ்கூட்டர் இதுவாகும். பவுன்ஸ் இன்ஃபினிட்டிய்யின் இதன் ஆரம்ப விலையும் 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இதன் ரைடிங் ரெஞ் 85 கிமீ ஆகும். இதில் 1500W மோட்டார் உள்ளது. Bounce Infinity E1 இன் அதிகபட்ச வேகம் 65kmph ஆகும்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link