TNPSC group 2,2Aமுக்கிய அப்டேட்.. தேர்வு எழுதச் சான்றிதழ் பதிவேற்றம் செய்யும் கடைசி நாள் இன்று!
டிஎன்பிஸ்சி குரூப் 2 மற்றும் 2 ஏ பிரிவில் தேர்வெழுதுபவர்களுக்காக முக்கிய அறிவிப்பைக் கடந்த ஜூன் 20யில் வெளியிட்டது.
டிஎன்பிஸ்சி குரூப் 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14யில் விறுவிறுப்பன களத்துடன் நடந்துமுடிந்தது.
டிஎன்பிஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வில் 7,93,966 தேர்வாளர்களில் 5,83,467 தேர்வர்கள் மட்டுமே இந்த தேர்வை எழுதினர்.
டிஎன்பிஸ்சி குரூப் 2 பணிகளுக்கான காலியிடங்கள் 534 மட்டுமே இருந்த நிலையில், முதன்மைத் தேர்வில் குறிப்பிட்ட 7,987 பேர் மட்டும் தற்காலிக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஸ்சி 2,2ஏ முதன்மை தேர்வில் 21,822 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட இந்த தேர்வர்களுக்காக முதன்மை எழுத்துத் தேர்வுகள் அடுத்த வருடம் 2025யில் பிப்ரவரி 2அன்று நடைபெறவுள்ளது.
குரூப் 2 தேர்வின் இரண்டாம் தாள் 2025 பிப்ரவரி 8 அன்று நடக்கவிருக்கிறது. மேலும் முதன்மை தாளுக்கான கட்டணம் ரூ150 செலுத்த வேண்டும். இதில் குறிப்பாக ஒரு முறை பதிவு மட்டும் இருப்பதாக டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது.
முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றுத் தேர்வான தேர்வர்கள் தமிழ் தகுதித் தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றத்தின் கடைசி நாள் இன்றுடன் முடிகிறது.
டிஎன்பிஸ்சி தேர்வர்கள் தங்களின் முழுத்திறமையைக் காட்டி வெற்றிக் கொடிகட்டிப் பறக்கத் தமிழ்நாடு என்றும் உறுதுணையாக இருப்பதோடு, ஒவ்வொருவரும் தங்களது தனித்திறமையைக் காட்டும் நேரமாக இந்த வாய்ப்பு உங்களுக்கு அமைந்துள்ளது.