`RIP SN10` மூன்றாவது முறையும் SpaceX ராக்கெட் ஏன் தோல்வியைத் தழுவியது?
'Beautiful soft landing' என்று நேரடி ஒளிபரப்பில், ஒரு ஸ்பேஸ்எக்ஸ் அதிகாரி கூறினார்.
ராக்கெட்டின் கீழே இருந்து தீப்பிழம்புகள் வெளியே வந்ததுமேம், குழுவினர் அதை அணைக்க முயன்றனர்.
சில நிமிடங்கள் கழித்து, ராக்கெட் தரையில் விழுந்து வெடித்தது, குப்பைகள் தரையில் விழுந்ததால் பெரும் புகை மேகங்கள் எழுந்தன.
(Photograph:Reuters)
பணி திட்டமிட்டபடி செல்லவில்லை என்றாலும், மஸ்க் அதை தானே பகடி செய்து ட்வீட் வெளியிட்டார். ராக்கெட் "ஒரு துண்டாக தரையிறங்கியது" ('landed in one piece') என்று எழுதினார்.
"ஸ்பேஸ்எக்ஸ் குழு மிகச்சிறந்த பணியைச் செய்து வருகிறது! ஒரு நாள், வெற்றிக்கனியை பறிப்போம்" என்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்தார்.
(Photograph:AFP)
எஸ்.என் 10 என பெயரிடப்பட்ட இந்த ராக்கெட் விண்ணில் சென்று, இறங்குவதற்குக் 10 கி.மீ உயரத்தை எட்டியதால் அதன் மூன்று என்ஜின்களை படிப்படியாக மூடி, மீண்டும் செங்குத்து அடைந்து பூமிக்கு திரும்புவதற்கு முன்பு கிடைமட்ட நிலையை அடைந்தது.
ஸ்பேஸ்எக்ஸ் வீடியோவின் படி, ராக்கெட் சரியாக தரையிறங்கியது தெரிந்தது. ஆனால், உடனே வெடித்துவிட்டது.
(Photograph:AFP)
முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்ஷிப் எஸ்என் 9 பிப்ரவரி 2 ஆம் தேதி மற்றொரு விபத்துக்குள்ளானது. எல்லாமே சரியாக இருப்பதாகவேத் தோன்றியது, ஆனால் ராக்கெட் சரியான நேரத்தில் நேராக்க முடியாமல், தரையைத் தொட்டபோது வெடித்தது.
(Photograph:Reuters)
சோதனை பயணத்திற்குப் பிறகு, ஸ்டார்ஷிப் முன்மாதிரி எஸ்.என் 8 டிசம்பர் 9 அன்று வெடித்தது. நேரடி வீடியோவில் ராக்கெட் தரையிறங்குவது தெரிந்தது. தரையில் எட்டும்போது வெடித்தது.
(Photograph:AFP)