ரோபோ ஷங்கரின் மகள் நடிகை இந்திரஜா ஷங்கரின் வருங்கால கணவர் இவர் தான்!

Sun, 04 Jun 2023-10:43 pm,

ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா தனது பெற்றோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, தளபதி விஜய்யின் 'பிகில்' திரைப்படத்தில் பெண் கால்பந்து வீராங்கனையாக பாண்டியம்மாவாக அறிமுகமானவர்.

 

இந்திரஜா இன்ஸ்டாகிராமில் அவரது அப்பா, அம்மா மற்றும் உறவினர் கார்த்திக் ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார்.

 

இந்திரஜா சமீபத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், அவர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் கார்த்திக்குடன் காணப்படட்டார்.

 

மேலும், அவர்களின் நெருக்கத்தைக் கவனித்து அவரைப் பின்தொடர்பவர்களில் ஒருவர் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா என்று கேட்டார்.

 

இந்த கேள்விக்கு இந்திரஜா உறுதியுடன் பதிலளித்துள்ளார், மேலும் திருமண தேதி முடிவு செய்யப்படவில்லை என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link