IND vs PAK : டாஸ் காயினை பாக்கெட்டில் வைத்துக் கொண்ட ரோகித் சர்மா..! ஷாக்கான பாபர் அசாம்
இப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் விக்கெட் கீப்பர் ஆலம் கான் நீக்கப்பட்டு பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இமாத் வாசிம் சேர்க்கப்பட்டார்.
அப்போது டாஸ் போடுமாறு அழைத்ததும், ரோகித் காயினை பாக்கெட்டில் வைத்ததை மறந்து அங்கிருந்தவர்களிடம் காயினை கொடுக்குமாறு கேட்டார். உங்க பாக்கெட்டில் தான் இருக்கிறது என பாபர் சொல்லி வயிறு குலுங்க சிரிக்க, ரோகித்தும் சிரித்தவாறே காயினை எடுத்து டாஸ் போட்டார்.

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் இறங்கிய நிலையில், திடீரென மழை பெய்ய தொடங்கியது. போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்ததால் டாஸ் போடுவதே தாமதமானது.
இருப்பினும் போட்டி தொடங்கிய நிலையில், இந்திய அணி ஒரு ஓவர் முடிவில் 8 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட, போட்டி 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.
பின்னர் ஆட்டம் தொடங்கியதும் ரோகித் சர்மா, விராட் கோலி போட்டியை தொடங்கினர். மேற்கொண்டு ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்த விராட் கோலி ஆப்சைடில் கேட்ச் என்ற முறையில் விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டானார்.