Weight Loss Tips: அதிக காலோரிகளை எரிக்க... தினமும் 30 நிமிட ஜாகிங் போதும்
Benefits of Jogging Daily: ஓடுதல் அல்லது ஜாகிங் செய்வது ஒரு சிறந்த கார்டியோ வொர்க்அவுட்டாகும். ஜாகிங் என்பது மெதுவாக அல்லது நிதானமாக ஓடுவது. உடலில் குறைவான அழுத்தத்துடன் பிட்னஸை அதிகரிப்பதே ஜாகிங் செய்வதன் நோக்கம்.
உடல் பருமன்: சுமார் 30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதன் மூலம் 223 முதல் 400 அல்லது அதற்கு மேற்பட்ட கலோரிகளை எரிக்க முடியும். இது நடைபயிற்சியின் மூலம் எரிக்கப்படும் கலோரியை விட அதிகம். உடல் எடையைக் குறைக்க தினமும் இந்தப் பயிற்சியை கடைபிடிப்பது நல்ல பலனைத் தரும்.
இதய ஆரோக்கியம்: ஜாகிங் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சிறந்த கார்டியோ வொர்க்அவுட். கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே மாரடைப்பு, இதய செயலிழப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான பிரச்சனைகளின் ஆபத்தை பெருமளவு குறைக்கும்.
நுரையீரல் ஆரோக்கியம்: நுரையீரலை வலுவாகவும் ஆரோக்கியமாக இருக்க, தினமும் ஜாகிங் செய்வது நல்ல பலன் கொடுக்கும். ஜாகிங் செய்வதன் மூலம் சுவாச பிரச்சனைகள் குணமாகும் என்கின்றனர் வல்லுநர்கள். இதன் மூலம், நுரையீரல்கள் சிறப்பாக செயல்பட்டு, உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சப்ளை சீராக இருக்கும்
மன ஆரோக்கியம்: ஜாகிங் மூளையில் எண்டோர்பின்கள் எனப்படும் உணர்வு-நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது, எனவே, தினமும் ஜாகிங் செய்பவர்களுக்கு மன ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்பட்டால் கண்டிப்பாக தினமும் நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செல்லுங்கள்.
தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமை: ஜாகிங் என்பது உங்கள் தசைகளையும் எலும்புகளையும் வலுப்படுத்தும் பயிற்சியாகும். இது குறிப்பாக உங்கள் கீழ் மூட்டுகளின் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
நீரிழிவு நோய்: இரத்த சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் தினமும் ஜாகிங் செல்வதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இதனால் வளர்சிதை மாற்றம் அதிகரித்து செரிமானம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.