ஆர்சிபி கோடிகளை கொட்டி ஏலத்தில் எடுத்தும்... புஸ்வானமாக சொதப்பிய 3 ஸ்டார் வீரர்கள்!

Thu, 05 Sep 2024-8:32 pm,

இதுவரை மொத்தம் 17 ஐபிஎல் தொடர்கள் நடைபெற்றுள்ளன. இதில் அதிகபட்சமாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. 

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான், ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட அணிகளும் கோப்பையை கைப்பற்றியிருக்கின்றன. 

 

அதில் கடந்த 17 சீசன்களாக பஞ்சாப், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட அணிகள் மட்டும் இதுவரை கோப்பையை வென்றதே இல்லை எனலாம். அதிலும் பல நட்சத்திர வீரர்களை வைத்திருந்த ஆர்சிபி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புகளை பலமுறை தவறவிட்டது. 

 

விராட் கோலி, கெயில், ஏ பி டிவில்லயர்ஸ், டேனியல் வெட்டோரி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நிரம்பிய ஆர்சிபி அணியால் (Royal Challengers Bangalore) கோப்பையை தற்போது வரை வெல்ல முடியாதது பெரிய விமர்சனங்களுக்கு உள்ளானது. 

 

அதிலும் குறிப்பாக ஏலத்தில் பெரிய ஸ்டார் வீரர்களை மட்டும் எடுப்பதாலேயே ஆர்சிபிக்கு (RCB) இந்த நிலைமை என வல்லுநர்கள் அடிக்கடி கூறுவது உண்டு. அந்த வகையில், ஏலத்தில் அதிக தொகை கொடுத்து ஆர்சிபி எடுத்த வீரர்களில், சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய மூன்று பேரை இங்கு காணலாம். 

 

டைமல் மில்ஸ்: இவரை ரூ.1 கோடி கொடுத்து 2017ஆம் ஆண்டு ஏலத்தில் ஆர்சிபி எடுத்தது. அப்போது அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரர் டைமல் மில்ஸ் (Tymal Mills) தான் . இங்கிலாந்தின் டி20 பிளாஸ்டில் சிறப்பாக விளையாடியதை அடுத்து அவரை ஆர்சிபி எடுத்தது. ஆனால், இவர் ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. ரன்களை வாரி வழங்கினார், பந்துவீச்சு தாக்குதலும் பெரிய அளவில் இல்லை. அவர் 5 போட்டிகளில் வெறும் 5 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். 

 

சௌரப் திவாரி: இவரை 2011ஆம் ஆண்டு ஏலத்தில் இவரை 7.36 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி தூக்கியது. மிடில் ஆர்டரில் பலமான இந்திய வீரரின் தேவை இருந்ததால், அந்த இடத்திற்காக சௌரப் திவாரியை (Sourabh Tiwary) எடுத்தது. ஆனால், அதற்கடுத்து மூன்று சீசன்களில் பெரிதாக சோபிக்கவில்லை. ஸ்ட்ரைக் ரேட் மிகக் குறைகவே இருந்தது. பெரிய தொகை கொடுத்து வாங்கியும் ஆர்சிபிக்கு இவரால் பெரிய நன்மை விளையவில்லை. 

 

கையில் ஜேமீசன்: இவரை 2021 ஐபிஎல் ஏலத்தில் 15 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி பெரிய எதிர்பார்ப்புடன் எடுத்தது. வழக்கம்போல் அவரும் ஐபிஎல் தொடரில் சொதப்பினார். 9 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை மட்டுமே கையில் ஜேமீசன் (Kyle Jamieson) எடுத்தார். ரன்களை வாரி வழங்கினார். ஆல்-ரவுண்டராக பெரிய எதிர்பார்ப்புகளை வைத்த ஆர்சிபிக்கு இவரும் ஏமாற்றத்தையே அளித்தார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link