தனது சூட்கேஸை திருமணம் செய்த இளம்பெண்... ரஷ்யாவில் நடந்த விநோத திருமணம்!
அவர்களின் உரிமைக்காக இன்று அமைப்புகள் ஏற்படுத்தி, அவர்களுக்கான உரிமையைப் பெறும் நிலைக்கு வந்துவிட்டனர். உலகம் இப்படி வளர்ந்து கொண்டிருக்கையில், ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு தான் வைத்திருக்கும் சூட்கேஸ் மீது காதல் வந்துவிட்டதாம்.
அட ஆமாங்க… ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஹெய்லிங் என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண் ரெய்ன் கோர்டன் இவருக்கு ஒரு வித்தியாசமான உணர்வு இருக்கிறது. அதை அறிவியல் மொழியில் ஆப்ஜெக்டோஃபிலியா என அழைக்கிறார். இந்த உணர்வு இருப்பவர்களுக்கு அசையாத பொருட்களின் மீது தான் ஆசையே ஏற்படுமாம். உதாரணத்திற்குத் தான் வைத்திருக்கும் செல்போன், தனது உடை, கைப்பை, என உயிரற்ற பொருட்களின் மீது தான் காதல் வருமாம்.
ரெய்ன் கோர்டன் கடந்த 2015ம் ஆண்டு தனக்கான ஒரு சூட்கேஸ் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சூட்கேஸை அவர் வாங்கும் போதே அவருக்கு அது பிடித்துவிட்டது. மிகவும் ஆசையுடன் தான் அந்த சூட்கேஸை வாங்கினார். தற்போது அவர் தான் அந்த சூட்கேஸிற்கு கிடியான் எனப் பெயர் வைத்துள்ளதாகவும், கிடியானை, ரெய்ன் கோர்டன் கடந்த ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது : “எங்களுக்குள் ஒரு டெலிபதி இருக்கிறது. அதன் மூலம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். இது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. கிடியான் எனக்கு ஒரு நல்ல கணவனாகவும், நல்ல நண்பனாகவும், நல்ல அறிவுரையாளனாகவும் இருக்கிறார். என்னைப் பற்றி அவர் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்.” என கூறினார்
ஒரு சூட்கேஸை பெண் ஒருவர் திருமணம் செய்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அண்மையில் கஜகஸ்தானை சேர்ந்த பாடி பில்டர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவத்தை, ரஷ்யா திருமணம் மிஞ்சி விட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.