சக்தி நாடிகளை சமநிலைக்குக் கொண்டுவரும் ருத்ராக்ஷம்! யாரெல்லாம் கௌரிஷங்கர் அணியலாம்?

Mon, 29 Jul 2024-5:47 pm,

பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் என யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம். கருவுற்றவர்களும், திருமணம் ஆனவர்களும், திருமணம் ஆனவர்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் ருத்ராட்சம் அணியலாம்.

 

இயற்கையாகக் கிடைக்கும் ருத்ராட்சத்தை அணிபவர்களுக்கு, அது கொடுக்கும் அத்தனை நன்மைகளும் கிடைக்கும். ஆனால், ருத்ராட்சம் அணிவது தொடர்பாக பல மூட நம்பிக்கைகள் நிலவுகின்றன

பல முகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருந்தாலும், ஐந்து முகம் கொண்ட ருத்ராட்சம் அனைவருக்கும் ஏற்றது. பஞ்சமுகி என அழைக்கப்படும் 5 முக ருத்ராட்சம் ஆரோக்கியத்தையும் மன அமைதியையும் தரக்கூடியது

இரண்டு ருத்ராட்சங்கள் ஒட்டி இருப்பது போல இருக்கும் ருத்ராட்சத்தை கௌரிஷங்கர் என்று அழைப்போம். இந்த ருத்ராட்சம் சிவசக்தி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. சக்தி நாடிகளைச் சமநிலைக்குக் கொண்டுவரும் ருத்ராட்சம் இது

ஒருவர் நீண்டகாலமாக பயன்படுத்திய ருத்ராட்சத்தை வாங்கி மற்றவர் பயன்படுத்தக் கூடாது; ஆனால், அப்பா தான் பயன்படுத்திய ருத்ராட்சத்தை தனது மகனுக்கோ அல்லது மகளுக்கோ தரலாம். அதேபோல, குரு தான் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை தனது சீடனுக்குத் தரலாம், இது போன்ற இன்னும் சில விதிவிலக்குக்கள் உள்ளன

பெண்கள் ருத்ராட்சம் அணிவது பற்றிய சந்தேகங்கள் பலருக்கும் இருக்கிறது. ஆனால், யாரும் எப்போது வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம். பெண்கள், தங்களுடைய தாலியுடன் சைவ, வைணவச் சின்னங்களைக் கோர்த்து அணியும் வழக்கம் உண்டு. அதை யாரும் எந்த சந்தர்ப்பத்திலும் கழற்றுவதில்லை. அதேபோல, ருத்ராட்சத்தையும் எப்போதும் அணியலாம், தாலியுடன் சேர்த்தும் ருத்ராட்சத்தை அணியலாம் 

மனதில் ஏற்படும் சலனங்களைச் சீர் செய்யவும், மனதை ஒருமுகப்படுத்தவும் ருத்ராட்சம் அணிவது பயன்தரும். சுவாசத்தைச் சுத்தப்படுத்தி உடலின் ஏழு சக்கரங்களையும் துரிதப்படுத்தும் பணியையும் ருத்ராட்சம் செய்கிறது

ருத்ராட்சத்தை மாலையாக மட்டுமே அணிய வேண்டும், கையில் காப்பு போல அணிவதை தவிர்ப்பது நல்லது

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link