Two Wheeler ஓட்டுபவரா நீங்கள்: இந்த பாதுகாப்பு டிப்ஸ் உங்களுக்காகத்தான்

Mon, 04 Jul 2022-1:38 pm,

இரு சக்கர வாகனம் ஓட்டும் போதெல்லாம், ஹெட்லைட் பீமை சரியாக பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். நெடுஞ்சாலையில் ஹை பீம் பயன்படுத்த வேண்டும் என ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் கூறுகிறது. நீங்கள் நகரத்திற்குள் சென்றாலோ அல்லது முந்திச் செல்வதாக (ஓவர்டேக்) இருந்தாலோ, லோ பீம் மட்டும் பயன்படுத்தவும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

சாலையில் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளவும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

சாலையில் செல்லும் எந்த வாகனத்தையும் தவறான வழியில் முந்திச் செல்லாதீர்கள். ஒரு திருப்பத்திலோ அல்லது கடக்கும்போதும் முந்திச் செல்ல வேண்டாம் என ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் கூறுகிறது. ஏனென்றால் யாராவது உங்களை முந்திச் செல்லும்போது முன்னால் தெளிவாகப் பார்க்க முடியாது. ரியர் வியூ மிரர் மற்றும் இண்டிகேட்டரை வைத்து எப்போதும் வலது புறத்தில் இருந்து முந்திச் செல்லவும். நீங்கள் பாதையை மாற்றப் போகும் போதெல்லாம், முதலில் உங்கள் தோள்பட்டையைத் திரும்பிப் பார்க்கவும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

இரு சக்கர வாகனத்தில் இரண்டு பிரேக்குகளையும் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். நீங்கள் மிகக் குறைந்த தூரத்தில் நிறுத்த வேண்டியிருந்தால், முன் பிரேக்கில் நான்கு விரல்களால் சமநிலையை பராமரித்து பிரேக் போடவும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

 

நீங்கள் திரும்ப வேண்டிய போதெல்லாம், மெதுவான வேகத்தில் திரும்பவும். இந்த நேரத்தில் முன் பிரேக்கைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். இங்கே பாதுகாப்பான வேகம் என்றால் அதிக வேகத்தில் திரும்பக் கூடாது என்பதாகும். வேகம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வகையில் இருக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பைக் அல்லது ஸ்கூட்டர் சறுக்காமல் இருக்கும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

இருவர் பைக் அல்லது ஸ்கூட்டரில் செல்லும்போது பின்னால் அமர்ந்திருப்பவர் இருபுறமும் கால்களை ஊன்றி உட்கார வேண்டும். மேலும், ஓட்டுநரின் இடுப்பை இறுக்கமாகப் பிடிக்க வேண்டும். (புகைப்படம் - ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ்)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link