சாக்ஷி அகர்வாலின் டாப் டக்கர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/03/301916-sakshiagarwal.jpg?im=FitAndFill=(500,286))
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/03/301915-sakshiagarwal1.jpg?im=FitAndFill=(500,286))
ரஜினியின் காலா படத்தில் அவரின் மருகள்களுள் ஒருவராக நடித்து புகழ்பெற்றார் சாக்ஷி அகர்வால். அடுத்ததாக கன்னடத்தில் வெளியான சாப்ட்வேர் கண்டா என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
![](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/07/03/301914-sakshiagarwal2.jpg?im=FitAndFill=(500,286))
தமிழில் யோகான், திருட்டு விசிடி, அத்யன், கககபோ, உள்ளிட்ட படங்களில் நடித்தார் சாக்ஷி அகர்வால்
விஸ்வாசம் படத்தில் நயன்தாராவுடன் நடித்திருந்த சாக்ஷி, டெடி, அரண்’மனை 3, நான் கடவுள் இல்லை, பாஹீரா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
தற்போது கெஸ்ட் சாப்டர்2, தி நைட், புறவி, குறுக்கு வழி உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், ஜி.வி.பிரகாஷூடன் இவர் நடித்த ஆயிரம் ஜென்மங்கள் படம் விரைவில் வெளியாக உள்ளது.
நடிப்பு மட்டுமல்லாமல் ஆக்ஷன் படத்தில் நடிகை ஆக்ஷனா பூரிக்கு குரல் கொடுத்து டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருக்கும் சாக்ஷி அகர்வால், தமிழ் பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று 49 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.
அந்த வகையில் தற்போது சாக்ஷி அகர்வால் மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்றுள்ளன.