குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?
அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படமும் குட் பேட் அக்லி திரைப்படமும் உருவாகி வருகிறது. இதில், விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்க, குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருக்கிறார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை இயக்கி அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் பெரிய ரசிகரும் கூட. இவர், தற்போது அஜித்தை வைத்து இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் முக்கால் வாசி படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.
டாக்டர் படத்தில் இரட்டை சகோதரர்களாக நடித்திருந்த ஆல்வின்-மெல்வின், குட் பேட் அக்லி படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இருக்கும் அத்தனை டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தவர், த்ரிஷா. அதிலும் குறிப்பாக விஜய்-அஜித் உடன் மட்டும் பல படங்களில் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்கள் ஏற்கனவே, ஜீ, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விடாமுயற்சி திரைப்படத்தில் ஒன்றாக நடித்துள்ள இவர்கள், அடுத்து குட் பேட் அக்லி திரைப்படத்திலும் ஜோடியாக நடிக்கின்றனர். அடுத்தடுத்து, இரண்டு படங்களில் இவர்கள் ஜோடியாக நடிப்பது இதுவே முதன்முறையாகும். இவர்களுக்கு இந்த படத்தில் ஒரு மகனின் கதாப்பாத்திரமும் இருக்கிறது.
குட் பேட் அக்லி படத்தில், அஜித்திற்கும் த்ரிஷாவிற்கும் மகனாக கார்த்திகேயா தேவ் என்ற நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கடந்த ஆண்டு வெளியான சலார் திரைப்படத்தில், பிருத்விராஜ்ஜின் சிறு வயது கதாப்பாத்திரமாக நடித்திருந்தார், கார்த்திகேயா தேவ். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித், ஒரு பக்கம் குடும்பம்-பைக் டூர் என்று பிசியாக இருந்தாலும், படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதனால், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.