சமந்தா தன் exக்கு வீணாக செலவு செய்ததுகுறித்து ஓபன் டாக் !!

Mon, 25 Nov 2024-2:26 pm,

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழிகளின் படங்களில் மக்கள் மனதில் நல்ல வரவேற்பைபெற்றுவருபவர் சமந்தா. சமீபத்தில் வருன் தவானுடன் இணைந்து நடித்த  சிட்டாடல் ஹனி பண்ணி வெப் சீரிஸில் மாஸாக நடித்துள்ளார்.

சமந்தா தன் வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தாலும், மனதில் தன்னம்பிக்கையுடன் இருந்து வருகிறார். உடல் நல பாதிப்பிலிருந்து மீண்டு வந்து மக்களை உற்சாகப்படுத்த பல படங்கள் மற்றும் வெப் சீரிஸில் ஆர்வம் காட்டி வருகிறார்.

 

சர்ச்சைக்குறிய விமர்சனங்களுக்கு நல்ல பதிலடிக்கொடுத்து தன் வேலையை அமைதியாகப் பார்த்துவரும் சமந்தா. சிட்டாடல் வெப்  தொடர் நிகழ்ச்சியில் ஜாலியாக பேட்டிக் கொடுத்து மக்களை கொள்ளையடித்து வந்தார்.

சமந்தா தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸுக்கு பின் இந்த சிட்டாடல் வெப் தொடரில் நடித்துள்ளார். இது சமந்தாவிற்கு சினியுலகில் மிகப்பெரியத் திருப்புமுனையாக அமைந்தது. 

சமந்தா சிட்டாடல் வெப் தொடரில் துணிச்சலாக ஆக்ஷன் காட்சிகளில் அதிரடியாக நடித்துள்ளார். நடிகை சமந்தா இவருடைய நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் ஸ்டோரிஸ் தினமும் பகிர்ந்து ரசிகர்களை தன்வசத்தில் வைத்துவருகிறார்.

சமந்தா சிட்டாடல் புரொமோஷன் நிகழிச்சியில் தன் ex குறித்து பேசியுள்ளார். அவரிடம் நீங்கள் மிகவும் அதிகமாக செலவு செய்த வீணான விஷயம் எது என்று கேள்வி எழுப்பினர், அதற்கு சமந்தா துளிஅளவு யோசிக்காமல் உடனே தைரியமாக பதில்கொடுத்ததை கீழேப் பார்ப்போம்.

சமந்தா தன்னுடைய EX - க்கு கொடுத்த பரிசுகளைதான் அவர் வீணாக செலவு செய்த பொருள் என்று  நச்சுனென்று பதிலளித்துள்ளார்.

மீண்டும் சமந்தாவிடம் நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள் என்று கேட்கப்பட்டதுக்கு, அதுக்கும் அவர் பதிலளித்துள்ளார் “கொஞ்சம் அதிகமாகவே” செலவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார். தற்போது சமந்தாப் பேசிய இந்த  வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link