சனி பெயர்ச்சி பலன் 2023, யாருக்கு சூப்பர்? யாருக்கு சுமார்?
மேஷ ராசி: 2023ஆம் ஆண்டு சனி பெயர்ச்சி மேஷ ராசிக்கு பண நெருக்கடியை ஏற்படுத்தும். குடும்பத்தில் பதற்றம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம். தேவையற்ற பயணங்கள் ஏற்படும்.
ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். வெளியூர் பயணங்களுக்கு சுப வாய்ப்புகள் உருவாகும். பொருளாதார நிலை மேம்படும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்களின் தலைவிதி திறக்கும். தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவும் விரிசல் நீங்கும். நீண்டகால நோயிலிருந்து விடுபடுவீர்கள்.
கடக ராசி: சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்து விபரீத ராஜ யோகத்தை தருவார். எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமரும் சனி பகவான் நிறைய வேலை பளுவை தரப்போகிறார். கவனமாக கையாளுங்கள் யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அதுவே உங்களுக்கு சிக்கலாகி விடும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களும் 2023ல் சனியின் பெயர்ச்சியினால் சிரமப்படுவார்கள். வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நீங்கள் குழப்பமடைவீர்கள். உடல்நலம் பாதிக்கப்படும். வேலை அழுத்தம் ஆதிக்கம் செலுத்தும். குடும்ப உறுப்பினர்களால் மன வேதனை அடையலாம்.
கன்னி ராசி: சனிபகவானின் அருளால் கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் கூடும். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். அயல்நாடுகளுடன் வணிக உறவுகள் தொடங்கும். இந்த நேரத்தில், அரசியலுடன் தொடர்புடையவர்கள் தங்கள் உழைப்பின் பலனைப் பெறுவார்கள்.
துலாம் ராசி: சமூகத்தில் மரியாதை கூடும். குடும்ப வாழ்க்கையில் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
விருச்சிக ராசி: கும்ப ராசியில் சனி பெயர்ச்சியானவுடன், விருச்சிக ராசிக்காரர்களுக்கு புத்தாண்டில் சனி தசை தொடங்கும். அதன் தாக்கத்தால் மன, பொருளாதார மற்றும் உடல் ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரலாம்.
தனுசு ராசி: உங்கள் தைரியமும் வலிமையும் அதிகரிக்கும். இந்தப் பெயர்ச்சியின் விளைவாக வெளிநாட்டிலிருந்து உங்களுக்குப் பணம் கிடைக்கும். அரசு வேலையில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரம் வலுவடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கு.
மகர ராசி: சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் தொழிலில் சிறப்பான வெற்றியைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள்.
கும்ப ராசி: சனி பகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பிரவேசிக்கவுள்ளார். இந்த யோகத்தினால் உருவாகும் மிகப்பெரிய நன்மை கும்ப ராசிக்காரர்களுக்கே கிடைக்கும். இவர்களின் அனைத்து பணிகளும் அதிர்ஷ்டத்தின் துணையுடன் வெற்றிகரமாக முடிவடையும். பழைய பிரச்னைகள் அனைத்தும் தீரும்.
மீன ராசி: மீன ராசியில் ஏழரை நாட்டு சனியின் முதல் கட்டம் தொடங்கும். கடினமாக உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.