இன்னும் 20 நாட்களில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளின் காட்டில் அதிர்ஷ்ட மழை
2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கப்படியும், 2023ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கப்படியும் சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப் போகிறார்.
மிதுன ராசி: கண்டச்சனி, அஷ்டம சனியால் கஷ்டங்கள் அனுபவித்த மிதுன ராசிக்காரர்களுக்கு பாக்ய சனி வரப்போகிறது. இதனால் மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் விடுபடுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் முடியப்போகிறது. இதனால் துன்பங்கள் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். மன உளைச்சல், நோய்கள் நீங்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.
துலாம் ராசி: ஜனவரி 17ம் தேதி துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். மன அழுத்தம் குறைவாக இருக்கும். மன மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும். பணம் மற்றும் தொழில் துறையில் வெற்றி பெறுவீர்கள்.
கும்ப ராசி: கும்பத்தை ஆளும் கிரகம் சனி பகவான். உங்கள் ராசியிலிருந்து லக்ன வீட்டிற்குள் நுழையப் போகிறார்கள். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்.