ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சியானார்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

Thu, 16 Mar 2023-7:23 am,

சிம்ம ராசி பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இடமாற்றம் நடக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சுப பலன்கள் வந்து சேரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர் கிடைக்கும். கூட்டு தொழில் பலன் தராது. சண்டைகள் வரும்.

துலாம் ராசி உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. தொழிலதிபர்கள் புதிய திட்டங்களைப் பெறுவார்கள். தொழில் விரிவாக்கமும் சாத்தியமாகும்.

தனுசு ராசி வேலை தேடுதல் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். புதிய தொழில் தொடங்கலாம். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். அக்டோபர் வரையிலான காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

மகர ராசி பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தொழில் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உண்டு. வெளியூர் பயணத்திற்கு சிறிது காலம் காத்திருக்கவும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link