மீன ராசிக்கு செல்லும் சனி... 3 ராசிகளின் வீடுகளுக்கு தேடி வரப்போகும் அதிர்ஷ்ட லட்சுமி
ஜோதிடத்தில், சனியின் ஒவ்வொரு நகர்வும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கர்மாவை வழங்குபவர் என்று அழைக்கப்படும் சனி, அவ்வப்போது தனது இருப்பிடத்தை ராசிக்கு ராசி மாற்றிக்கொண்டே இருப்பார். சில நேரங்களில் முன்னோக்கியும், சில நேரங்களில் பின்னோக்கியும் அதாவது வக்ர பெயர்ச்சியும் அடைவார்.
சனி பகவான் (Sani Peyarchi) எந்த நிலையில் பெயர்ச்சி அடைந்தாலும் 12 ராசிகளுக்கு அதன் தாக்கம் எதிரொலிக்கும். புத்தாண்டு தொடங்கியதும் இப்போது கும்ப ராசியில் இருக்கும் சனி பகவான் அடுத்ததாக மீன ராசிக்கு செல்ல இருக்கிறார். அதனால் மேஷம், துலாம், கும்பம் ஆகிய 3 ராசிகளுக்கும் அதிர்ஷ்ட லட்சுமியின் பார்வை பட்டு செல்வம் எல்லாம் அபரிமிதமாக வரப்போகிறது. இந்த 3 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம் : புத்தாண்டில் நடக்கும் சனிப்பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு மிகவும் மங்களகரமானதாகவும் நன்மையாகவும் கருதப்படுகிறது. சனி பகவான் மேஷ ராசிக்காரர்களான உங்களின் 11வது வீட்டில் நுழைவார். சனி இருக்கும் இந்த இடத்தின் மூலம் மிகச் சிறப்பான ஆசீர்வாதங்கள் உங்களுக்கு கிடைக்கும்.
சனி பகவானின் ஆசியால் பல வருடங்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். செல்வம் பெருகும். நல்ல நண்பரின் உதவியால் நல்ல வேலை கிடைக்கும் காரியம் முடியும். வியாபாரிகள் பெரும் லாபம் அடைவார்கள்.
துலாம் : சனியின் இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சனி பகவானின் அருளால் சமூக கௌரவம் பெறுவீர்கள்.
வருமானம் அதிகரிக்கும். உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
கும்பம் : சனியின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கும் விசேஷமாக கருதப்படுகிறது. தொழில் சம்பந்தமான சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். மன உளைச்சல்கள் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சட்டப் பிரச்சனை தீரும்.
சனி பெயர்ச்சி எப்போது? : சனி பெயர்ச்சி டிசம்பர் 27 ஆம் தேதி மீன ராசிக்கு செல்கிறார். செல்வத்தின் அதிபதியான குரு பார்வை உள்ள மீன ராசியில் பெயர்ச்சி அடையும் நேரத்தில் இந்த பலன்கள் எல்லாம் மேஷம், துலாம், கும்ப ராசியினருக்கு கிடைக்கும்.