உதயமாகி இந்த ராசிகளை உச்சம் தொடவைப்பார் சனி: 5 ராசிகளுக்கு இது ஜாக்பாட் காலம்
சனி உதயத்தின் தாக்கம் காரணமாக மன உளைச்சல் ஏற்படலாம். உடல் உபாதைகளும் வரக்கூடும். வாகனம் ஓட்டும்போது கவனம் தெவை. விபத்துகள், காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். வணிகத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் லாபகரமானதாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
மகிழ்ச்சியும் வளமும் பெருகும். அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.
சனி உதயம் காரணமாக இந்த காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவை பெறுவீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றம் இருக்கும். இப்போது செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும்.
சிம்ம ராசிக்காரர்கள் இப்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிரிகள் தீங்கு விளைவிக்க அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எனினும், புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால், சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளலாம். பேச்சில் நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அதிகப்படியான கவனம் தேவை.
வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். குடும்பத்தில் அமைதி இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். புதிய தொழில்களை தொடங்கும் முன் கவனமாக இருப்பது நல்லது.
இந்த காலத்தில் நீங்கள் ஆசைப்படும் அனைத்து பணிகளும் நடந்துமுடியும். அனைத்து விதமான மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனம் அமைதியாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தின் தாக்கத்தால் குழப்பங்கள் அதிகரிக்கலாம். உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். குடும்ப ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசு அதிகாரிகளுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். நிதி ஆதாயம் ஏற்படலாம்.
தனுசு ராசிக்காரர்களுக்கு சனி உதயத்தின் தாக்கம் காரணமாக மன குழப்பங்களும் உடல் நல பிரச்சனைகளும் அதிகமாகலாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். நிலம், சொத்து சம்பந்தமாக பல பிரச்சனைகள் வரலாம். தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இதனால் அலைச்சல் அதிகமாகலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மகர ராசிக்காரர்களுக்கு பெரிய ஆளுமைகள், உயர் அதிகாரிகள் ஆகியவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த அறிமுகத்தால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் திறமையால் உங்கள் எதிரிகள் மீது வெற்றி காண்பீர்கள். செல்வத்தையும் கௌரவத்தையும் பெறுவீர்கள்.
உயர் பதவியுடன், பணப் பலன்களையும் பெறலாம். வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களுக்கு இது லாபகரமான காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் தற்போது உள்ளது.
நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பேச்சில் அமைதியை காப்பது நல்லது. மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்றாக யோசித்து முடிவெடுப்பது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.