சனி வக்ர நிவர்த்தி... ஷஷ ராஜயோகத்தினால்... கார்த்திகை முதல் இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்

Wed, 06 Nov 2024-10:33 am,

சனி வக்ர நிவர்த்தி பலன்: ஒவ்வொரு கிரகமும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அதன் இயக்கத்தை மாற்றுகிறது. ஜோதிட கணக்கீடுகளின்படி, நவம்பர் 15 அன்று இரவு 7:15 மணிக்கு, சனி தனது ராசியான கும்ப ராசியில் வக்ர நிவர்த்தி அடையும்.

சனியின் சஞ்சாரம் மற்றும் அதன் நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிக்காரர்களையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன்கள் கிடைக்கும். இவர்கள் நிறைய பணம் சம்பாதித்து அபரிமிதமான முன்னேற்றம் அடைவார்கள். இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்வோம்..

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர நிவர்த்தி அமோகமாக அமையப் போகிறது. பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கி வெற்றி கிட்டும். தொழில், வியாபாரம் போன்றவற்றிற்கு நல்ல நேரம். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி பொருளாதார நிலை மேம்படும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கைகூடும்.

கடக ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன, இது அவர்களின் நிதி நிலைமையை முன்பை விட வலுவாக மாற்றும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு உறவு கை கூடும். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.

கன்னி ராசியினருக்கு நிதி ஆதாயம் ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். முதலீடு செய்வதற்கு நேரம் சாதகமாக இருக்கும். எதிர்காலத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். 

சனியின் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைத் தரும். உங்கள் வேலையில் வெற்றி பெறுவீர்கள். முன்பை விட நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.

மீன ராசிக்காரர்களுக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.  உங்கள் வேலையில் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள்.  ஊழியர்களின் பணி பாராட்டப்படும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். மன அழுத்தம் நீங்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link