Christmas: யானையில் சவாரி செய்து பரிசுகளை விநியோகிக்கும் Santa Claus!
தொப்பிகள் அணிந்த சாண்டா வெள்ளை தாடியுடன் முகக்கவசம் அணிந்த யானையில் சவாரி செய்கிறார் பள்ளி குழந்தைகள், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு, யானையின் தும்ப்பிக்கையில் மாட்டபப்ட்டிருக்கும் கூடைகளில் இருக்கும் பாதுகாப்பு முகக்கவசங்ககளை விநியோகிக்கிரார் சாண்டா கிளாஸ்...
(Photograph:Reuters)
மாணவர்களின் நேசத்தைப் பெற்ற சாண்டாவும், யானைகளும்.... "பார்ப்பதற்கு வேடிக்கையாக, அழகாக இருக்கிறது என மாணவர்கள் கூறி மகிழ்ச்கின்றனர்.
(Photograph:Reuters)
பள்ளிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் யானைகள்: தாய்லாந்தில் உள்ள பள்ளிகளூக்கு இரண்டு தசாப்தங்களாக யானைகள் சென்று கிறிஸ்துமஸ் பரிசுகளை விநியோகிக்கின்றன. பொதுவாக யானையின் தும்பிக்கைகளில் பொருத்தப்படும் பைகளில் சாக்லேட் மற்றும் பொம்மைகள் போன்ற பரிசுகள் வைக்கப்பட்டிருக்கும்.
(Photograph:Reuters)
விலங்குகளுக்கும் சமூக இடைவெளி கட்டுப்பாடு: இந்த ஆண்டு, யானைகள் சமூக இடைவெளியை கடைபிடித்தன. பள்ளிகளுக்கு வெளியே நின்றிருந்த யானைகளின் தும்பிக்கைகளில் இருந்த பைகளில் முகக்கவசங்கள் இருந்தன. மாணவர்கள் அதை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டனர்.
(Photograph:Reuters)
இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்தம் கிறிதுமஸாக கொண்டாடப்படுகிறது.கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாளான இன்று டிசம்பர் 24-ம் தேதி நள்ளிரவு கிறிஸ்தவர்கள் அனைவரும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
வீடுகளும், தேவாலயங்களும் நாணல் என்ற புல்லினால் குடில் கட்டி, குழந்தை இயேசு, அவரை ஈன்றெடுத்த அன்னை மேரி, யோசேப்பு, இடையர்கள், ஞானிகள் என அலங்கரிப்பார்கள்.
இயேசு கிறிஸ்து பிறந்ததை கொண்டாடும் வகையில் உலகம் முழுவதும் சாண்டா கிளாஸ் (Santa Claus) போல் வேடமணிந்த பலரும் அனைவருக்கும் பரிசுப் பொருட்களையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்வார்கள்.
பாங்காங்கிற்கு அருகிலுள்ள ஒரு கடல் உணவு மையத்தில் உள்ள சிலருக்கு வார இறுதியில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் தாய்லாந்து அதிகாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்களை வலியுறுத்துகின்றனர்.