குரோதி ஆண்டின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி வழிபாடு! துணிச்சலுடன் கூடிய அறிவு கிடைக்கும் நாள்!
பருவகால மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் அனுசரிக்கப்படும் நவராத்திரி சமயத்தில் மக்களுக்கு ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மக்களைக் காக்கும்படி அன்னை சக்தியை பூஜிக்கும் விழா நவராத்திரி
நவராத்திரியின் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் என்று முடிகிறதோ, அந்த நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.
புரட்டாசி அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடங்கும் நவராத்திரி வழிபாடுகளில் இரண்டாம் நாள் பூஜைகள் அன்னை பிரம்மசாரிணிக்கு உரியது
மனதில் உள்ள கவலைகளை தீர்க்கும் தெயவம் பிரம்மச்சாரிணி தேவி
நவராத்திரியின் இரண்டாம் நாளில் பிரம்மச்சாரிணி தியான மந்திரம் சொல்லி வழிபடுவது நல்லது
ததாநகர பத்மபியம் அக்ஷமாலா கமண்டலம்... தேவி பிரசிதட்டு மயி பிரம்மசாரின நுத்தன:
அபார மனோதைரியத்தை தரக் கூடிய தேவிபிரம்மச்சாரிணி தேவி ஆவார்
ஒருவருக்கு, தேவையான பொறுமையையும் தரக் கூடியவர் பிரம்மச்சாரிணி தேவி மட்டுமே