சனி பெயர்ச்சி ஆரம்பம்.. பொற்காலம், ராஜ மகா அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு
மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சவால்களை சந்திக்க நேரிடும். வேலையில் தடைகள் ஏற்படலாம். மன அழுத்தத்தத்தை உணரலாம். செலவுகள் குறையும், சேமிப்பு அதிகரிக்கும்.
ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம். புதிய வேலை வாய்ப்பு பெறலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த தவறான புரிதல்கள் தீர்வுக்கு வரும்.
மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். பொறாமை கொண்டவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணம் அனைத்தும் இப்போது பெறலாம். குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
கடகம் - கடக ராசிக்காரர்கள் புதிய வழியில் இருந்து வருமானம் அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாக உழைக்க நேரிடும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு நிலம் அல்லது சொத்து வாங்கலாம். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். திருமண வாழ்க்கையில் பதற்றம் ஏற்படும். நிதி நிலை வலுவாக இருக்கும்.
கன்னி - கன்னி ராசிக்காரர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். பதவி உயர்வு பெறலாம். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் வலுவாக இருக்கும்.
துலாம் - துலாம் ராசகாரர்களுக்கு தொழிலில் சில ஏற்ற தாழ்வுகள் வரலாம். உத்தியோகத்தில் டென்ஷனை சந்திக்கலாம். நிதி வளர்ச்சி இருக்கும். தோல் சம்பந்தமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
விருச்சிகம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படலாம். புதிய திசையில் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். பங்கு சந்தைகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். மேலதிகாரியின் பாராட்டுகளைப் பெறலாம். வெளிநாடு சென்று படிக்கலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். புதிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதம் ஏற்படும். வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும்.
கும்பம்- கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் வருமானம் பெருகும்.
மீனம் - மீன ராசிக்காரர்கள் உத்வேகத்துடன் இருபார்கள். பணியிடத்தில் பொறுப்புகள் கூடலாம். அழுத்தம் அதிகரிக்கும். அலட்சியமாக இருக்க வேண்டாம். வியாபாரத்தில் லாபம் இருக்கும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.