சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், பொற்காலம் ஆரம்பமாகும்

Fri, 12 Aug 2022-6:34 pm,

சனி பகவான் ஜூலை 2022 இல் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்கு பிற்போக்குத்தனமாக நுழைந்தார். அக்டோபர் 2022 வரை இந்த நிலையில் இருப்பார். அதாவது சனி பகவான் மகர ராசியில் சுமார் 3 மாதங்கள் பிற்போக்கு நிலையில் இருந்து இந்த ராசிக்காரர்களுக்கு பலன் தருவார். அதிக அதிர்ஷ்டத்துடன் கூடிய இந்த ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி பகவான் மேஷ ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தின் பத்தாம் வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். ஜாதகத்தின் இந்த வீடு தொழில் மற்றும் வேலை சார்ந்தது. எனவே, அதன் தாக்கத்தால், இந்த காலகட்டத்தில் அவர்களின் கௌரவமும் பதவியும் அதிகரிக்கும். வேலை தேடும் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி செய்யும் பாணி மேம்படும். மரியாதையும் புகழும் கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள். 

 

மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால், மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் துவங்கியுள்ளன. ஏனெனில் உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் சனி 11 ஆவது வீட்டில் பிற்போக்கு நிலையில் இருக்கிறார். ஜோதிடத்தில், 11 ஆவது வீடு வருமானம் மற்றும் லாபத்திற்கான ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே, இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதன் மூலம் நீங்கள் பெரும் பணத்தைப் பெறலாம். 

சனி பகவானின் அருளால் இந்த நேரத்தில் நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் திரும்பக்கிடைக்கும். அதே போல் பங்குச் சந்தை மற்றும் லாட்டரியில் இப்போது லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணி இடத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். ஊதிய உயர்வு மற்றும் பதவு உயர்வி கிடைக்க ஏற்ற காலமாக இது இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலத்தில் சில பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் சாதகமான விளைவுகள் கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link