சனி பெயர்ச்சி பலன் 2023: கும்பத்திற்கு இடப்பெயர்ச்சியான சனி..யாருக்கு பரிகாரம்

Wed, 18 Jan 2023-8:43 am,

சனிப்பெயர்ச்சி பலன்கள்: மேஷம் லாப சனி, ரிஷபம் தொழில் சனி, மிதுனம் பாக்ய சனி, கடகம் அஷ்டமத்து சனி, சிம்மம் கண்டச்சனி, கன்னி ருண ரோக சத்ரு சனி, துலாம் புண்ணிய சனி, விருச்சிகம் அர்த்தாஷ்டம சனி, தனுசு தைரிய சனி, மகரம் பாத சனி, கும்பம் ஜென்ம சனி, மீனம் லாப சனி கிடைக்கும்.

 

திருக்கணித பஞ்சாங்கம்: சனிப் பெயர்ச்சி நேற்று நிகழ்ந்துள்ளது. சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்தார். வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற மார்ச் மாதம் 29ம் தேதி சனிபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார். 

 

மேஷ ராசி: லாப சனி காலம் என்பதால் பலன்களும் நன்மைகளும் அதிகரிக்க ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

 

ரிஷப ராசி: தொழில் சனி காலம் தொடங்கும் காலம் என்பதால் சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.

 

மிதுன ராசி: பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். 

 

கடக ராசி: கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனி தொடங்கும் என்பதால் திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.

 

சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் தொடங்குகிறது இதனால் புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமி, சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 

 

கன்னி ராசி: ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 

 

துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு புண்ணிய சனி காலம் என்பதால் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 

 

விருச்சிக ராசி: அர்த்தாஷ்டம சனி என்பதால் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 

 

தனுசு ராசி: உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது என்பதால் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். 

 

மகர ராசி: பாதசனி காலம் என்பதால் சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது. 

 

கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலம் என்பதால் ஆஞ்சநேயர் மற்றும் சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும்.

 

மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் நவக்கிரகம், ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

 

திருநள்ளாறு சனி பெயர்ச்சி எப்போது: திருநள்ளாறு கோயில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது வரும் மார்கழி மாதம் அதாவது வரும் டிசம்பர் மாதம் 2023 நடைபெற உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link