சனி பெயர்ச்சி.. அபூர்வ ராஜயோகத்தால் 2025 வரை அதிர்ஷ்டம், பொற்காலம் இந்த ராசிகளுக்கு
நீதியின் கடவுளாக கருதப்படும் சனி நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருபவர் ஆவார். சனி தற்போது அதன் சொந்த முக்கோண ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறது.
சனியின் அதிபதி ராசியில் பயணித்து வருவடிகால் தற்போது ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகம் 2025 ஆம் ஆண்டு வரை நீடிப்பதால் சில ராசிக்காரர்கள் சிறப்பான பலன் கிடைக்கும். எனவே 2025 ஆம் ஆண்டு வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஷஷ பஞ்ச மகாபுருஷ ராஜயோகத்தால் வாழ்க்கையில் நல்ல வெற்றி கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கும்பம்: சனி தனது சொந்த ராசியில் அமைந்திருப்பதால் ஷஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு வரை பல நன்மைகள் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சியை மட்டுமே பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டில் ஷஷ ராஜயோகம் உருவாகியுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளைப் பெறலாம். சனியின் சஷ்டி ராஜயோகத்தால் இந்த ராசிக்காரர்கள் எல்லாத் துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு ஷஷ ராஜயோகம் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். நிதி ஆதாயம் உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.
விருச்சிகம்: உங்கள் ராசியில் ஷஷ ராஜயோகம் நான்காம் வீட்டில் உருவாகி உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிதி நிலையில் முன்னேற்றம் அடையும். நிதி ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். சம்பளம் கூடும். தொழில் ரீதியாக நல்ல காலமாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
சனி பகவானின் அருள் பெற, சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளறு பதிகம் ஆகியவற்றை கூறலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுபவர்களை சனிபகவான் எப்போதும் தொந்தரவு செய்ய மாட்டார். ஆகையால் நம்மால் ஆனவரை நலிந்தோருக்கு உதவுவது நல்லது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.