சனிப் பெயர்ச்சியால் ஓஹோவென வாழப்போகும் அதிர்ஷ்டசாலி ராசிகள்! இது சதய நட்சத்திர சனியின் பரிசு!
சனி பகவானின் நட்சத்திர மாற்றத்தால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மகத்தான வெற்றியைப் பெறும் ராசிக்காரர்கள் நான்கு ராசிகளை சேர்ந்தவர்கள். அந்த பட்டியலில் நீங்களும் உண்டா? தெரிந்துக் கொள்ளுங்கள்.
சதய நட்சத்திரம் ராகுவின் நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தில் சனி பகவான் தற்போது சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். இரு தீய கிரகங்களின் பாதிப்பு ஒரு பக்கம் என்றாலும், நன்மைகள் சிலருக்கு கிடைக்கிறது
குடும்பத்தில் இதுவரை இருந்துவந்த குழப்பங்கள் தீரும். மனதில் இருந்துவந்த கவலைகள் கொஞ்சம் குறையும், வாழ்க்கையில் நல்லதும் கெட்டதும் சகஜம் தான் என்ற புரிதல் உண்டகும். பண வரத்து அதிகரிக்கும், செலவுகள் குறையும்
துலாம் ராசிக்காரர்களுக்கு சதயத்தில் சனியின் இயக்கம் நிம்மதியைத் தரும். வாழ்க்கையில் இதுவரை இருந்த போராட்டங்கள் முடிவுக்கு வரும் காலம் இது. குடும்பத்தில் ஒருவரையொருவர் புரிந்துக் கொள்ள முற்படும் காலம் இது
சதய சனி, கடகத்திற்கு பல அனுகூலங்களைக் கொண்டுவந்து சேர்ப்பார். கடக ராசியினருக்கு இதுவரை இருந்துவந்த கவலைகள் மாறும், பணியிடத்தில் மதிப்பு மரியாதை கூடும். தொழில் வளர்ச்சி திருப்தியைக் கொடுக்கும்
மேஷ ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடும், திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இனிமையாக நேரம் கழிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும், ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது