80C தவிர வருமான வரியை சேமிக்க சுலப வழிகள்! லட்சக்கணக்கில் பணத்தை சேமிக்க வழி!
இந்த நிதியாண்டிற்கான வரியைச் சேமிக்க விரும்பினால், இன்னும் கால அவகாசம் உள்ளது. இரண்டு மாதங்களுக்குள் திட்டமிட்டு செயல்பட்டால் லட்சக்கணக்கான பணத்தை சேமிக்கலாம்
வரி சேமிப்புக்கு எளிதான வழி பிரிவு 80C ஆகும். ஆனால், இது தவிர, வரி விலக்கு பெற விரும்பினால், வேறு நல்ல விருப்பங்களும் உள்ளன. 4 லட்சம் ரூபாய் வரை வரிச் சேமிப்பு செய்யக்கூடிய வழிகளைத் தெரிந்துக் கொள்வோம்
புதிய வரி விதிப்பில் ரூ.7 லட்சத்துக்கு வரிவிலக்கு உண்டு. ஆனால், பழைய வரி விதிப்பில், வரி விலக்கு பெறுவதற்கான எளிதான வழி, பிரிவு 80C (வரி சேமிப்பு பிரிவு 80C) இல் மட்டுமே உள்ளது. ஆனால், ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கிறது.
சேமிப்புக் கணக்கில் வட்டியில் தள்ளுபடி
வருமான வரியின் பிரிவு 80TTA இன் கீழ், சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்யப்படும் வட்டிக்கு வரி விலக்கு வரம்பிற்குள் வருகிறது. 10,000 வரை ஆண்டு வட்டிக்கு வரி விலக்கு கோரலாம்.
அதே நேரத்தில், மூத்த குடிமக்கள் பல்வேறு சேமிப்புக் கணக்குகளில் பிரிவு 80TTB இன் கீழ் ஆண்டுதோறும் ரூ. 50,000 வரை வட்டிக்கு வரி விலக்கு பெறுகிறார்கள்.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.50 ஆயிரம் வரை வரிவிலக்கு கிடைக்கும். இந்த விலக்கு பிரிவு 80CCD (1B) இல் கிடைக்கிறது. அதாவது உங்கள் ஆண்டு வருமானம் வரிக்கு உட்பட்டது என்றால் இங்கு முதலீடு செய்வதன் மூலம் ரூ.50 ஆயிரம் வரை தள்ளுபடி பெறலாம்.
வருமான வரியின் 80D பிரிவில், சுகாதார காப்பீடு செய்து, அதற்காக செலுத்தப்படும் பிரீமியத்திற்கு வரி விலக்கு உள்ளது. பாலிசியில் யார் சேர்க்கப்பட்டுள்ளனர், அவர்களின் வயது என்ன என்பதைப் பொறுத்து வரிவிலக்கு உண்டு, ₹ 25,000 முதல் ₹ 1 லட்சம் வரை வரிவிலக்கு பெறலாம். உங்களுக்கும் உங்கள் பெற்றோருக்கும் தலா ரூ.25000 க்ளைம் செய்யலாம்
வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் இரண்டு வகையான வரி விலக்குகள் உள்ளன. அசல் தொகைக்கு 80சி கீழ் ₹ 1.5 லட்சம் வரை வரிவிலக்கு உண்டு. அதே நேரத்தில், பிரிவு 24ன் கீழ், அதிகபட்சமாக ₹ 2 லட்சம் வரையிலான வட்டிக்கு வரி விலக்கு உண்டு. இது தவிர, முதல் வீட்டை வாங்குபவர்களுக்கு வருமான வரிப் பிரிவு 80EE இன் கீழ் வீட்டுக் கடன் வட்டியில் கூடுதல் விலக்கு அளிக்கிறது. உங்கள் பெயரில் வேறு வீடு இருக்கக்கூடாது என்பது தான் விதிமுறை. இந்தப் பிரிவின் கீழ் நீங்கள் ரூ. 50,000 வரை கூடுதல் வரியைப் பெறலாம். சொத்தின் விலை ரூ.50 லட்சத்துக்கு குறைவாகவும், கடன் ரூ.35 லட்சத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பது நிபந்தனை.
தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை கொடுத்து வரியைச் சேமிக்கலாம். வருமான வரியின் 80CCC பிரிவின் கீழ் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கியத் தொகைக்கு வரிவிலக்கு கோரலாம். அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் நன்கொடை வரி விலக்கு வரம்பின் கீழ் வருகிறது. இருப்பினும், முழு நன்கொடைக்கும் விலக்கு கிடைக்காது.