மாத சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேமிக்க எளிய வழிகள் இதோ!
இன்றைய சூழலில் அவசரத்திற்கு பணத்தை கையில் வைத்து இருப்பது அவசியமான ஒன்று. அவசர காலங்களில் யாரிடமும் கடன் கேட்காமல் இருக்க இந்த சேமிப்பு நிச்சயம் உதவும்.
சம்பளம் கைக்கு வந்தவுடன் வாடகை, உணவிற்கான செலவுகளுக்கு பணத்தை கொடுத்தது போக மீதமுள்ள பணத்தில் குறிப்பிட்ட அளவை தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். அப்படி ஒரு பணம் இருக்கிறது என்பதை மறந்து விடுங்கள்.
ஒவ்வொரு மாதமும் பட்ஜெட் போட்டு செலவு செய்து பழகுங்கள். அன்றாட செலவு மற்றும் பொழுதுபோக்கிற்கு தனித்தனியாக பணத்தை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
நீங்கள் எவற்றிற்கெல்லாம் செலவு செய்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டாலே பாதி செலவை கட்டுப்படுத்த முடியும். எனவே பட்ஜெட் தயார் செய்வது முக்கியம்.
எந்த விஷயத்தில் அதிகம் செலவாகிறது என்பதை தெரிந்து கொண்டு அதில் செலவை குறைக்கலாம். எடுத்துக்காட்டாக கடையில் அதிகம் சாப்பிட்டால், அதனை குறைந்து கொண்டால் சிறிது தொகை மிச்சமாகும்.
நீங்கள் சேமித்து வைத்துள்ள பணத்தை சரியான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான வருமானம் கிடைக்கும். இதன் மூலம் சேமிப்பில் வைத்துள்ள பணத்தை செலவழிப்பது நிறுத்தப்படும்.