Brain Health: மூளை மந்தமாக்கும்.... இந்த ஆபத்தான பழக்கங்கள் வேண்டாமே...
மூளை மந்தமாக்கும் பழக்கங்கள்: இன்றைய அவசர கதியிலான உலகத்தில், இலக்குகளை நோக்கி நாம் ஓடிக் கொண்டிருக்கிறோம். அனைவருக்கும் வேலையில், இலக்குகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அழுத்தம் உள்ளது. அன்றடா வாழ்க்கை டென்ஷனுடன் கூடவே, நமது சில மோசமான பழக்கவழக்கங்கள், மூளையின் செயல்திறனை காலி செய்து மந்தமாக்கி விடும்.
அதிக அளவிலான சத்தம் இரைச்சல்: அதிக சத்தத்தில் தொடர்ந்து இசையை கேட்பது, மிகுந்த இரைச்சல் மிகுந்த சூழ்நிலையில் இருப்பது ஆகியவை, மூளை ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்படுவதோடு, காது கேட்காமல் போகும் நிலையும் ஏற்படலாம். அதிக இரைச்சல் மன அழுத்தத்தை உண்டு பண்ணும் கார்டிசால் ஹார்மோனை அதிகரித்து மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிக அளவிலான சர்க்கரை: உணவில் அதிக அளவில் இனிப்புகள் மற்றும்சர்க்கரை அதிகம் உள்ள ஐஸ்கிரீம் கேக் போன்ற உணவுகளை அதிகம் உட்கொள்வதால், ஞாபக சக்தி பெரிதும் பாதிக்கும். அளவிற்கு அதிக சர்க்கரை மூளை செல்களை பாதித்து, வீக்கத்தை ஏற்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் கொடுப்பதால், மூளையின் செயல்திறன் பெரிதும் பாதிக்கும்.
சூரிய ஒளி உடலில் படாத நிலை: சூரிய ஒளி உடலில் படுவதால் உடலில் சரட்டோனின் ஹார்மோன் அளவு அதிகரித்து மன அழுத்தத்தை குறைக்கும். இதற்கு நேர் மாறாக சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் மன அழுத்தம் ஏற்பட்டு மூளையின் செயல்திறன் பாதிக்கும். அதோடு வைட்டமின் டி பற்றாக்குறை காரணமாக சிதறல் அதிகமாகும். எலும்பு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாது மூளை ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி அவசியமாகும்.
உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்: உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மனு ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். உடல் உழைப்பு இல்லாத நிலை மூளையை மழுங்கடிக்க செய்து விடும். சோம்பேறித்தனம், காரணமாக மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மூளையின் செயல்திறன் பாதிக்கும்.
நீர்ச்சத்து குறைதல்: உடலில் நீர்ச்சத்து குறைவதால், கவனம் செலுத்தும் திறன் பெரிதும் பாதிக்கப்படும். மூளை செல்கள் திறம்பட வேலை செய்ய, உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க வேண்டும். மேலும் நீர்ச்சத்து குறைவதால் தலைவலி, கவன சிதறல், மனநிலை மாற்றம் ஆகியவை ஏற்படலாம்.
மன அழுத்தம்: நீண்ட கால மன அழுத்தம் மூளையின் செயல் திறனை பெரிதும் பாதிக்கும். மன அழுத்தம் நீண்ட நாட்கள் நீடிப்பதால் உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து மூளை நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, அதிகரிக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.