SBI: டெபிட் கார்டு இல்லாமலேயே ATM-ல் பணத்தை எடுக்கலாம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), எஸ்பிஐ டெபிட் கார்டு இல்லையென்றாலும் பணத்தை எடுக்கும் வசதியை அளிக்கிறது. இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிஐ ஏடிஎம்களில் மட்டுமே எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கி வருகிறது.
எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது ஆண்ட்ராய்டு தொலைபேசியில் எஸ்பிஐ யோனோ செயலி ( SBI YONO app) பதிவிறக்கம் செய்திருந்தால் பணத்தை எடுக்க முடியும். எஸ்பிஐ ஆன் லைன் பேங்கிங் லாக் இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி, யோனோ செயலியில் உள்நுழைய முடியும். அதன்பிறகு, தனது கணக்கின் 6 இலக்க MPIN அமைக்கலாம்.
எஸ்பிஐ யோனோ செயலியில் உள்நுழைந்த பிறகு, எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் யோனோ கேஷை (Yono Cash) கிளிக் செய்ய வேண்டும். எளிதாக அணுகுவதற்கு, இது கிவிக் லிங்காக வழங்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் செக்ஷனுக்கு சென்று நீங்கள் ஏடிஎம்மில் இருந்து திரும்பப் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும். எஸ்பிஐ யோனோ செயலியை பயன்படுத்தி பணத்தை எடுக்க அதிகபட்ச வரம்பு ரூ .10,000 ஆகும்.
SBI உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு எஸ்பிஐ யோனோ ரொக்க பரிவர்த்தனைக்கான எண்ணை அனுப்பும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் இந்த எண்ணையும், எஸ்பிஐ யின் யோனோ கேஷ் பாயிண்டுகளில் அவர் அமைத்த பின்யையும் பயன்படுத்த வேண்டும், இது கார்டு இல்லாத பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ள எஸ்பிஐ ஏடிஎம்களில் பணத்தை எடுக்கலாம். உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் அனுப்பப்படும் எஸ்பிஐ யோனோ ரொக்க பரிவர்த்தனை எண் நான்கு மணி நேரம் செல்லுபடியாகும்.
எஸ்பிஐ ஏடிஎம்மில், எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர் ஏடிஎம்மின் முதல் பக்கத்தில் 'கார்டு-இல்லாத பரிவர்த்தனை' (Card-Less Transaction) ஆப்ஷனை பயன்படுத்த வேண்டும், பின்னர் யோனோ கேஷுக்கு சென்று விவரங்களை உள்ளிட வேண்டும். எஸ்பிஐ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அருகிலுள்ள யோனோ காஷ் பாயிண்டுகளை யோனோ செயலிய் மூலம் கண்டறியலாம்.