SBI Gold Current Account: வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் கணக்கு
)
வணிகம், வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தி. நீங்கள் தினமும் பண பரிவர்த்தனை செய்யும் வணிகராக இருக்கும்போது, உங்களுக்கு வங்கியின் நடப்புக் கணக்கு (Current Account) தேவையாகிறது. இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நடப்புக் கணக்கைத் திறந்தால் (SBI Current Account benefits), வங்கி உங்களுக்கு பல சிறந்த பலன்களை வழங்கும்.
)
எஸ்.பி.ஐ இன் ஒரு சிறப்பம்சம் வாய்ந்த கணக்குதான் எஸ்.பி.ஐ கோல்ட் கரண்ட் அகவுண்ட். இதில், வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. நீங்களும் இந்தக் கணக்கைத் திறக்க விரும்பினால், இந்தக் கணக்கின் நன்மைகளைப் பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
)
- பாரத ஸ்டேட் வங்கியில் கோல்ட் கரண்ட் அகவுண்ட்டில் மாதாந்திர சராசரி இருப்புத் தொகை ரூ.1,00,000 ஆகும். - இந்தக் கணக்கில் மாதந்தோறும் ரூ.25 லட்சத்தை இலவசமாக டெபாசிட் செய்யலாம். - ஒவ்வொரு மாதமும் 300 மல்டிசிட்டி பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகம் உங்களுக்கு வழங்கப்படும். - நீங்கள் ஆன்லைனில் பணத்தை மாற்ற விரும்பினால், RTGS மற்றும் NEFT ஐ இலவசமாக பயன்படுத்தலாம்.
- ஒவ்வொரு மாதமும் 50 இலவச டிமாண்ட் டிராஃப்ட் வசதியைப் பெற முடியும். - எந்த கட்டணமும் இல்லாமல் உங்கள் ஹோம் பிரான்சிலிருந்து பணத்தை எடுக்கலாம். - நீங்கள் 22,000-க்கும் அதிகமாக உள்ள SBI கிளைகளில் பணத்தை எடுக்கலாம், டெபாசிட் செய்யலாம். - இதில் உங்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வேகமான கார்ப்பரேட் இணைய வங்கி வசதியைப் (Corporate Internet Banking) பெற முடியும். - இதில் நீங்கள் நடப்புக் கணக்கின் மாதாந்திர அறிக்கையை இலவசமாகப் பெறுவீர்கள். - நீங்கள் விரும்பினால், உங்கள் நடப்புக் கணக்கை வேறு எந்த கிளைக்கும் மாற்றிக்கொள்ளலாம்.
இந்த சிறப்புக் கணக்கைத் திறந்து, ஹோம் பிரான்ச் அல்லாத கிளையில் தினமும் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். அதே நேரத்தில் ஹோம் பிரான்சில் இலவசமாக, எந்த வரம்பும் இல்லாமல் பணத்தை எடுக்க முடியும். இது மட்டுமின்றி, இதில் கணக்கு வைத்திருப்பவர், நான் ஹோம் பிரான்சில் இருந்து தினமும் ஒரு லட்சம் ரூபாய் எடுக்கலாம். கோல்ட் கரெண்ட் அகவுண்டில் 550 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.