SBI Recruitment 2023: எஸ்பிஐ வங்கியில் பணி புரிய அறிய வாய்ப்பு!
SBI Recruitment 2023: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஒப்பந்த அடிப்படையில் SBI/ e-ABs ஓய்வு பெற்ற அதிகாரிகளை பணி நியமனம் செய்கிறது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் sbi.co.in/web/careers க்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
மொத்தம் 94 காலி பணியிடங்கள் இந்த ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படும். விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறினால், அவர்களின் விண்ணப்பம் நேர்காணலுக்கு பரிசீலிக்கப்படாது.
SBI Recruitment 2023: பதவியின் பெயர்: Resolvers துறை: வாடிக்கையாளர் சேவை துறை காலியிடங்களின் எண்ணிக்கை: 94 வேலை செய்யும் இடம்: வங்கி அதன் தேவைக்கேற்ப இந்தியாவில் எந்த இடத்திலும் பணியமர்த்தும்.
விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என்பதால், குறிப்பிட்ட கல்வித் தகுதிகள் எதுவும் தேவையில்லை. ஓய்வு பெற்ற அலுவலர்கள், வங்கியின் அமைப்புகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய நல்ல அறிவாற்றல் மற்றும் செயல்திறன் பற்றிய சிறந்த பதிவு பெற்றிருக்க வேண்டும்
சம்பளம்: MMGS-II ரூ.40,000/- MMGS-III ரூ.40,000/- SMGS-IV ரூ.45,000/-
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐ இணையதளமான https://bank.sbi/web/careers அல்லது https://www.sbi.co.in/web/careers என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.