எஸ்பிஐ எப்போது லாக்கரில் உள்ள பொருட்களை அகற்றும்? லாக்கரின் புதிய விதிமுறைகள்

Sat, 17 Jun 2023-3:46 pm,

ஜூன் 30, 2023க்குள், அனைத்து வங்கிகளுக்கும் லாக்கர் வைத்திருப்பவர்களில் குறைந்தது 50 சதவீதம் பேர் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதை உறுதி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது

எனவே லாக்கர் குறித்து எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயவுசெய்து உங்கள் வங்கி கிளையை அணுகவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்பிஐ 

நீங்கள் ஏற்கனவே புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், மற்றுமொரு துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது

எஸ்பிஐயின் சிறிய லாக்கர் வாடகை கட்டணம் வங்கி நகர்ப்புற மற்றும் மெட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2000 மற்றும் ஜிஎஸ்டியை கட்டணமாக எஸ்பிஐ வசூலிக்கிறது, அதே நேரத்தில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கான கட்டணம் ரூ. 1500 மற்றும் ஜிஎஸ்டி ஆகும்

எஸ்பிஐயின் நடுத்தர அளவுடைய லாக்கர் வாடகை கட்டணம் வங்கி மெட்ரோ மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ. 4000 மற்றும் ஜிஎஸ்டி மற்றும் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற வாடிக்கையாளர்கள் ரூ. 3000 மற்றும் ஜிஎஸ்டி.

SBI இன் பெரிய லாக்கர் வாடகை கட்டணம் நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000+ஜிஎஸ்டியை செலுத்துகின்றனர், அதே நேரத்தில் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புறங்களில் உள்ளவர்கள் ரூ.6000+ஜிஎஸ்டி செலுத்துகின்றனர்

எஸ்பிஐயின் மிகப் பெரிய லாக்கரின் வாடகை மெட்ரோ மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.12,000 மற்றும் ஜிஎஸ்டி என்ற கட்டணத்தை எஸ்பிஐ வசூலிக்கிறது, மேலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் ரூ.9000 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது

SBI லாக்கர் கையாள்வதற்கான கட்டணங்கள் SBI லாக்கரை ஆண்டுக்கு 12 முறை கட்டணம் இல்லாமலும், அதன் பிறகு ஒவ்வொரு முறை வரும்போதும் ரூ. 100 + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும்.

செயல்படாத லாக்கர் சரியான நேரத்தில் வாடகை செலுத்தப்பட்டாலும், லாக்கர் ஏழு வருடங்கள் இயக்கப்படாவிட்டால், லாக்கரில் உள்ள பொருட்களை, லாக்கர் வாடகைதாரரின் நியமனதாரர்கள் அல்லது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மாற்றலாம் அல்லது வெளிப்படையான முறையில் பொருட்களை அப்புறப்படுத்தலாம்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link