அட.. நாங்க ஸ்கூல் போக ரெடி என்கின்றனர் இந்த மாநில பள்ளி மாணவர்கள்..!!!
உத்தரகண்ட் அரசு டிசம்பர் 15 முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரிய வகுப்புகள் முதலில் திறக்கப்பட்டு, அதன் பிறகு, சிறிய வகுப்புகளின் குழந்தைகளும் பள்ளிச் செல்ல தொடங்குவார்கள்.
ஹரியானாவில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் டிசம்பர் 14 ஆம் தேதி திறக்கப்படும். பொது தேர்வு காரணமாக, இந்த இரண்டு வகுப்புகளின் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்படும். இதன் பின்னர், 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான பள்ளிகள் டிசம்பர் 21 முதல் திறக்கப்படும்.
மகாராஷ்டிராவில் 9-12 வகுப்பு வரையிலான பள்ளிகள் கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா காரணமாக, 5 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நிலைமைகள் மேம்பட்டால், ஜனவரி முதல் சிறிய வகுப்புகளையும் தொடக்கலாமா என்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
பீகாரிலும், 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக பள்ளிகள் விரைவில் மீண்டும் திறக்கப்படலாம். இருப்பினும், ஒடிசாவில் பள்ளி திறப்பது குறித்து அரசுக்கு குழப்பம் நிலவுகிறது. அங்குள்ள அரசு பள்ளிகள் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
தில்லி, மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய மாநிலங்களில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படாது. கொரோனா தடுப்பூசி வரும் வரை பள்ளிகளை திறக்க மாட்டோம் என்று இந்த மாநிலங்களின் அரசுகள் அறிவித்துள்ளன. மத்திய பிரதேசத்திலும், 8ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 2021 மார்ச் 31ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எஞ்சிய மாநிலங்கள் குழப்ப நிலையில் உள்ளன. அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி வரும் வரை காத்திருக்கிறார்கள். ஜனவரி முதல் இந்தியாவில் தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கினால், பல மாநிலங்கள் பிப்ரவரியில் பள்ளிகளைத் திறக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.