பிரிவு 377: நங்கை, நம்பி, ஈரர், திருனர் பாலினத்தவர்களை வரவேற்கும் நாடுகள்

Mon, 24 Sep 2018-2:02 pm,

LGBT வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தை சட்டப்பூர்வமாக வெளிப்படையாக ஏற்ற முதல் நாடு நெதர்லாந்தாகும். இங்கு நம்பி(Gay) அல்லது நங்கை(Lesbian) பாலினத்தவர்களுக்கு எந்தவித சிக்கல்கள் காணமுடியாத ஒரு நாடு நெதர்லாந்து. (போட்டோ twitter/@Iamsterdam)

இங்கே உள்ள மக்கள் LGBT சமூகத்துடன் மிகவும் நட்பாக உள்ளனர், LGBT பாலின உறவுகளுக்கு இங்கு எந்தத் தீங்கும் இல்லை. எல்ஜிபிடி சமூகத்தின் மக்கள் எவ்வித தடையுமின்றி நேரத்தை செலவிடுவதற்கு பல இடங்களும் இங்கு உள்ளன. (புகைப்பட உபயம்: Twitter / @ Iamsterdam)

இஸ்ரேலிய தலைநகரான டெல் அவீவில் LGBT பாலின இயல்புகளைக் கொண்ட சமூகத்தினர் நிறைய பேர் உள்ளனர். இந்த நகரம் ஆண்டு முழுவதும் பயணிகளால் நிறைந்திருக்கிறது. (புகைப்பட உபயம்: twitter / @ sashkaro)

LGBT சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் நிதானமாக ஓய்வெடுக்கவும், மகிழ்ச்சியை அனுபவிக்கவும் பல நைட் கிளப்புகள், பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் உள்ளன. (புகைப்பட உபயம்:  twitter/@TelAviv)

கிரேக்கத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக மைக்கோனோஸ் இருக்கிறது.  மைக்கோனோஸ் நகரில் ஒரு தனியார் தேவலாயம் உள்ளது. இங்கு குறிப்பாக LGBT சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக LGBT சமூகத்தை சேர்ந்த மக்கள் ஆண்டு முழுவதும் இந்த நகருக்கு வந்து செல்வது வழக்கம். (புகைப்பட உபயம்: twitter / @ NigellaLawson)

ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரம், LGBT சமூக மக்களுடைய "மெக்கா" என்று அழைக்கப்படுகிறது. இங்கே இந்த சமூகத்தை சேர்ந்த அதிகமான மக்கள் உள்ளனர். பெர்லின் நகரரில் LGBT சமூக மக்களுக்கு பல சிறப்புக் கிளப்புகள் உள்ளன. (புகைப்பட உபயம்: twitter/@VisitBarlin)

ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரத்தில் LGBT சமுதாய மக்களின் வண்ணமயமான மற்றும் நவீன வாழ்வு வாழ்வதற்கும், அவர்களின் கனவு நிறைவேற்றும் நகரமாக உள்ளது. இதனால் தான் LGBT பாலின சமுதாய மக்கள் அதிகம் சுற்றுலா செல்லக்கூடிய பட்டியலில் பெர்லின் முதலிடத்தில் உள்ளது. (புகைப்பட உபயம்: twitter / @ BerlinTourism)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link