ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த மெளன ராகம்-2 ரவீனா!
இயக்குநர் நேசன் இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளிவந்த 'ஜில்லா' படத்தில் நடிகர் விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ரவீனா. அதன் பிறகு 2016-ம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’ என்ற படத்தில் நடித்தார்.
பிறகு Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். சினிமா தவிர்த்து சீரியல்களிலும் நடித்து வருகிறார். ஜீ தமிழின் 'பூவே பூச்சூடவா' சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார்.அதில் இவர் கடைசி தங்கச்சியாக பல சேட்டைகள் செய்து அசத்தினார்,இவருக்கென்றே தனியென ரசிகர் பட்டாளம் உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பராக வெற்றியடைந்த திரைப்படம் ராட்சசன். இதில்,அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா. இந்த படத்தில் இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பல்வேறு நடனம், காமெடி ஷோக்களிலும் பங்கேற்று நடித்து வருகிறார்
தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் சீரியலின் பகுதி 2-ல் நடித்து கொண்டிருக்கிறார்.இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது,மேலும் டிஆர்பியும் எகிறியது.முதல் சீசனை போலவே இரண்டாம் சீசனுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது
இவர் சமீபத்தில் தனது 18-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் ரவீனா அவரது காதலருடன் மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் காதலர் சர்ப்ரைஸாக ரவீனாவின் பிறந்தநாளுக்கு வந்துள்ளார்.மேலும் புகைப்படத்துடன் அவர் பதிவிட்டிருக்கும் 'நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்போமா?' என ஆங்கில கேப்ஷன் அனைவரையும் காண்டாக்கியுள்ளது .