இந்தியாவின் மிக மிக காஸ்ட்லியான நகரம் இதுதான்...! சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?
மனிதர்கள் வாழ்வதற்கு உலகின் மிகவும் காஸ்ட்லியா நகரங்கள் குறித்த ஆய்வை மெர்சஸர் (Mercer) என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. 226 நகரங்களின் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் இந்திய நகரங்கள் எந்த இடங்களை இந்த வருடம் பிடித்திருக்கின்றன, கடந்தாண்டு ஆய்வில் அவை எந்த இடத்தை பிடித்திருக்கின்றன என்ற ஒப்பீட்டை இங்கு காணலாம்.
7. கொல்கத்தா: இந்தாண்டு தரவரிசையில் 207வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு 211வது இடத்திலேயே இருந்தது.
6. புனே: இந்தாண்டு தரவரிசையில் 205வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. கடந்தாண்டு 213வது இடத்தில்தான் இருந்தது.
5. ஹைதராபாத்: இந்தாண்டும் சரி, கடந்தாண்டும் சரி தரவரிசையில் ஹைதராபாத் 202வது இடத்திலேயே நீடிக்கிறது.
4. பெங்களூரு: இந்தாண்டு தரவரிசையில் 195வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 189வது இடத்தில் இருந்தது.
3. சென்னை: இந்தாண்டு தரவரிசையில் 189வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 184வது இடத்தில் இருந்தது.
2. புது டெல்லி: இந்தாண்டு தரவரிசையில் 165வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 169வது இடத்தில் இருந்தது.
1. மும்பை: இந்தாண்டு தரவரிசையில் 136வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு 147வது இடத்தில் இருந்தது.