செவ்வாய் பெயர்ச்சி 2025... 45 நாள்கள் அற்புதமான வாழ்க்கை காத்திருக்கு... இந்த 3 ராசிகளுக்கு!
ஜோதிடத்தின்படி ஒவ்வொரு கிரகமும் வெவ்வேறு ராசிகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் பெயர்ச்சியடையும். செவ்வாய் பகவான் ஒவ்வொரு 45 நாள்களுக்கும் ஒருமுறை தனது ராசியை மாற்றுவார்.
அந்த வகையில், மொத்தமாக 12 ராசிகளிலும் செவ்வாய் பகவான் பெயர்ச்சியாகி ஒரு சுழற்சி நிறைவடைய 22 மாதங்கள் எடுக்கும். வரும் ஜன. 21ஆம் தேதி செவ்வாய் பகவான் இந்தாண்டில் பெயர்ச்சி அடைய இருக்கிறார்.
ஜன.21ஆம் தேதியில் இருந்து செவ்வாய் பகவான் (Mangal Parivartan) அடுத்த 45 நாள்களுக்கு மிதுன ராசியில் வக்ர நிலையில் இருப்பார்.
செவ்வாய் பெயர்ச்சியால் (Mars Transit 2025) அடுத்த 45 நாள்கள் இந்த 3 ராசிகளுக்கு அற்புதமாக அமையும். இவர்கள் ராஜ வாழ்க்கையை வாழ்வார்கள் எனலாம்.
மிதுனம் (Gemini): செவ்வாய் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய நன்மை காத்திருக்கிறது. துணிச்சலும், நம்பிக்கையும் இந்த காலகட்டங்களிலும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். நீண்ட நாள்களாக முடிவடையாமல் இருந்த வேலைகள் நிறைவடையும். பிள்ளைகளின் படிப்பில் எவ்வித பிரச்னையும் இருக்காது. உங்களின் பெற்றோரிடத்தில் இருந்து பெரும் ஆதரவு கிடைக்கும்.
கன்னி (Virgo): செவ்வாய் பெயர்ச்சியால் உங்கள் வீட்டிற்கு எதிர்பாராத பொருள்கள் வரும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பும் உள்ளது அல்லது புதிய வாகனங்களை கூட நீங்கள் வாங்கலாம். சமூகம் சார்ந்த பணிகளில் நாட்டம் அதிகமாகும். ஆன்மீக சுற்றுலாவுக்கு செல்வீர்கள், நீங்கள் நீண்ட நாள்களாக நினைத்து வரும் புதிய தொழில் தொடங்கும் முயற்சிக்கு இதுவே உகந்த காலம்.
விருச்சிகம் (Scorpio): உங்கள் ஜாதகத்தில் இந்த பெயர்ச்சியால் பாக்யா யோகம் உருவாகும். இதனால் உங்களுக்கு எதிர்பாராத இடங்களில் இருந்து வருமானம் அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து லாபம் வரலாம், அல்லது பழைய முதலீடுகளில் லாபம் வரலாம். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் வரும். உடல் நலன் சீராக இருக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும்.
பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துகள் மற்றும் கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee News) உறுதிப்படுத்தவில்லை.