திருமணத்தடைகளை விலக்கி சுபகாரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் செவ்வாய்ப் பெயர்ச்சி!
கிரகங்களின் இளவரசர் என்று சொல்லப்படும் செவ்வாய் கிரகம், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைய சுமார் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார்
இந்த மாதம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி புதனின் ராசியான மிதுன ராசிக்கு, செவ்வாய் பெயர்ச்சி அடையப் போகிறார். மிதுனத்தில் செவ்வாயின் சன்சாரத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் இருக்கும்.
ஒரு கிரகமானது எந்த ராசியில் இருக்கிறது என்பதைப் பொறுத்து பலாபலன்கள் மாறும். செவ்வாய் கிரகம், புதனின் கிரகமான மிதுன ராசியில் ஆகஸ்ட் 26ம் தேதியன்று பெயர்வதால் ஏற்படும் நன்மைகளை பரிபூர்ணமாக அனுபவிக்கும் ராசிகளைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்
12 ராசிகளில் நான்கு ராசிகளுக்கு செவ்வாயின் மிதுன சஞ்சாரம் அருமையான வாழ்க்கையையும், நல்ல மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
செவ்வாயின் மிதுன சஞ்சாரத்தால், மேஷ ராசிக்காரர்களின் மனோதைரியம் அதிகரிக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நல்ல செய்திகள் வந்துசேரும். பணியிடத்தில் சாதகமான சூழல் இருப்பதுடன், வருமானத்திற்கான புதிய வழிகளும் திறக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு வேலைகளை இலகுவாக்கும்
துலாம் ராசியினருக்கு, செவ்வாயின் மிதுன சஞ்சாரம் மூதாதையரின் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை நீக்கித் தரும். இதற்கு காரணம், பூமிக்காரகரான செவ்வாய், அறிவுக்காரகரான புதனின் ராசியில் சஞ்சரிப்பதால், துலாம் ராசியினர் விவேகமாக விஷயத்தை அணுகுவதாக இருக்கும். அதேபோல், பிறரிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் காலம் இது
சிம்மத்திற்கு செவ்வாய்ப் பெயர்ச்சி பலன்கள் அமோகமாக இருக்கும். சமூகத்தில் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். பணப்ப்பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மனதில் நிம்மதி தோன்றும் காலம் இது
நீண்டகாலமாக மனதை அரித்துவந்த கவலைக்கு குட்பை சொல்லும் அளவுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். திருமணத்தடையை போக்கி வாழ்க்கைத்துணையை மீன ராசிக்காரர்களுக்கு செவ்வாய் அமைத்துக் கொடுப்பார்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது