Marriage Relationship: உங்களுக்கும் பார்ட்னருக்கும் இடையில் திருமண உறவில் அதிக தூரம் ஏற்பட்டுவிட்டதாக நீங்கள் நினைக்கும்பட்சத்தில், இந்த 5 விஷயங்களில் கவனம் செலுத்தினால் உறவில் நெருக்கம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பார்ட்னர் உடன் நெருக்கமில்லாமல் இருந்தால் அந்த உறவு ஆரோக்கியமானது அல்ல. வாழ்வில் பெரிய சந்தோஷங்களை இழக்க நேரிடும்.
கணவன் - மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகம் இருந்தால்தான் அந்த உறவில் ஒரு பிடிமானம் இருக்கும். நெருக்கம் இல்லாதபட்சத்தில் நிச்சயம் இவருக்கும் நடுவே கண்ணில்படாத வெறுப்பு மேலோங்கும்.
கணவன் - மனைவி இடையே பிரச்னை இல்லையென்றாலும் அவர்கள் நெருக்கமாக இல்லை என்றால் அது பெரிய சிக்கல்தான். கணவன் - மனைவி திருமண உறவில் தூரமாக விலகியிருந்தால் இருவருக்கும் வாழ்வில் சந்தோஷம் இருக்காது. அந்த வகையில், நெருக்கம் அதிகரிக்க தம்பதிகள் செய்ய வேண்டியவை குறித்து இங்கு காணலாம்.
நம்பிக்கையாக இருங்கள்: திருமண உறவில் நம்பிக்கையும் பொறுமையும் மிக அவசியமான ஒன்றாகும். உங்களுக்கு இருவருக்கும் நெருக்கம் குறைவாக இருந்தால், ஒரு முடிவெடுப்பதில் அவசரம் காட்டாதீர்கள். சற்று காலம் எடு்தது அதுகுறித்து சிந்தியுங்கள். நம்பிக்கையை இருவரும் வளர்ப்பதன் மூலம் நெருக்க்ததை பெறுவீர்கள்.
நேரம் செலவிடுங்கள்: திருமண உறவில் இருவரும் அதிக நேரம் செலவிடுவது அவசியமாகும். நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து திரைப்படங்களுக்குச் செல்வது, கடற்கரை மற்றும் பூங்கா ஆகியவற்றுக்கு செல்வது இருவருக்கும் இடையிலான தூரத்தை குறைக்கும்.
நினைவுகளை திரும்பி பாருங்கள்: உங்களின் திருமண உறவின் கடந்த காலங்களின் மகிழ்வான தருணங்களை நினைவுக்கூர்வதன் மூலம் தற்போது ஏற்பட்டுள்ள செயற்கையான தூரம் என்பது குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.
மனம் திறந்து பேசுங்கள்: திருமண உறவில் மனம் திறந்து பேசுவது என்பது முக்கியமாகும். நீங்கள் எதையும் மறைக்காமல் பேசினால் நிச்சயம் கணவன், மனைவி இடையேயான தூரம் குறையும். நல்ல தகவல் தொடர்பு இருக்கும்பட்சத்தில் நெருக்கம் அதிகரிக்கும்.
சின்ன சின்ன விஷயங்கள்: பிறந்தநாள்கள், முதல் வருட கொண்டாட்டம், சிறப்பான தருணங்கள் உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களையும் நினைவுக்கூர்வதன் மூலம் உங்களின் நெருக்கம் அதிகரிக்கலாம். நீங்கள் திருமண உறவில் சின்ன சின்ன விஷயங்களை பார்த்து பார்த்து செய்வதன் மூலம் பிரச்னைகள் தீரலாம்.
பொறுப்பு துறப்பு: இவை பொதுவான தகவல்களின் அடிப்படையில் வைத்து எழுதப்பட்டவை. எனவே இதை பின்பற்றும் முன் உரிய வல்லுநரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.