அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் ஷ்டாஷ்டக யோகம்... சனி பகவானால் பலன் பெறும் 3 ராசிகள்
சனி பெயர்ச்சி: கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி. சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி, 12 ராசிகளின் சுழற்சியை முடித்துவிட்டு, மீண்டும் அதே ராசிக்கு வர 30 ஆண்டுகள் ஆகும். சனி பகவான் 2025ம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
செவ்வாய் பெயர்ச்சி: கிரகங்களின் தளபதியாகக் கருதப்படும் செவ்வாய் கிரகம் ஒரே ராசியில் 45 நாட்கள் வரை பயணிப்பார். செவ்வாய் தற்போது கடக ராசியிலும், சனி கும்ப ராசியிலும் அமர்ந்துள்ளனர். செவ்வாய் டிசம்பர் 7 ஆம் தேதி கடக ராசியில் வக்ர நிலையை அடைவார். செவ்வாய் ஜனவரி 21, 2025 வரை கடக ராசியில் இருப்பார். செவ்வாயின் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அருமையான காலம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
ஷடாஷ்டக யோகம்: ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் ஆறாவது மற்றும் எட்டாவது வீட்டில் இருக்கும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இந்த நேரத்தில் கடகத்தில் செவ்வாய் இருப்பதாலும், சனி கும்பத்தில் இருப்பதாலும் ஷடாஷ்டக யோகம் உருவாகிறது.
அதிர்ஷ்ட ராசிகள்: ஜோதிட சாஸ்திரத்தில் ஷடாஷ்டக யோகம் துன்பங்களை கொடுப்பதாக கருதப்படுகிறது. இந்த யோகம் பொதுவாக அசுபமாக கருதப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இதனால் நல்ல பலன் பெறலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். அப்படிப்பட்ட 3 அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மேஷ ராசிக்காரர்களுக்கு ஷடாஷ்டக் யோகம் காரணமாக திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரும். உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு பொருளாதார பிரச்சனைகள் நீங்கும். செவ்வாய் மற்றும் சனியின் ஆசீர்வாதத்தால் உங்களின் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், உங்கள் மனம் விளையாட்டின் பக்கம் திரும்பும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
கும்ப ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையை மாற்ற நினைத்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தற்போதைய பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.