சதயத்திற்கு மாறும் சனியால் சங்கடங்களை எதிர்கொள்ளப்போகும் ராசிகள்! பாவம் கஷ்டகாலம் தான்...
சதயத்தில் சனி பெயர்ச்சியாவது ஜோதிட ரீதியாக அவ்வளவு நல்லதில்லை. ஏனென்றால், சனி இருள் கிரகம் என்பதைப் போலவே ராகுவும் இருண்ட கிரகம், இரு அசுபர்களும் இணைந்தால் சில ராசிகளுக்கான காலம் மிகவும் மோசமானதாக இருக்கும். அக்டோபர் 3ம் தேதிக்கு மேல் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் இவை
சனி மற்றும் ராகுவின் இணைவு அசுபமாக இருந்தாலும் மேஷ ராசியினருக்கு மிகவும் மோசம் இல்லை என்று சொல்லலாம். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம், ஆனால் புதிய பிரச்சனைகளால் மன அழுத்தம் ஏற்படும். நிதி ஆதாயம் உண்டாகும் என்றாலும், பணப் பற்றாக்குறை என்றும் இருந்துக் கொண்டே இருக்கும்
தனுசு ராசிக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி செல்வத்தையும் புகழையும் தரும் என்றாலும், பிரச்சனைகளால் மனம் நொந்து போகும். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் மனதை கவலைக் கொள்ளச் செய்யும். பொருளாதார பிரச்சனைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கும்
சனிபகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிப்பது கன்னி ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சங்கடப்படுத்தும். புதிய தொழில் தொடங்க விரும்புபவர்கள் அதனை தள்ளிப்போடுவது நல்லது.
சிம்ம ராசியினருக்கு சனியின் நட்சத்திர மாற்றம் பரபரப்பான வாழ்க்கையைக் கொடுக்கும். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். புதிய வேலையைத் தொடங்க நினைப்பவர்கள் தை மாதம் வரை ஒத்திப்போடலாம்
சனியின் நட்சத்திரப் பெயர்ச்சியால் வாழ்க்கையில் பிடிப்பு குறையும். குடும்பத்தினரிடம் நெருக்கம் குறையும், கவலைகள் மனதை அலைக்கழித்தாலும் எதையும் தாங்கும் மனதையும் சனி கொடுப்பார் என்பது தான் ஆறுதலான விஷயம்
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.