சனி பெயர்ச்சி 2025: இந்த 3 ராசிகளுக்கு சோதனை மேல் சோதனை தான்... தப்பிக்க வழி இருக்கா?

Sat, 28 Dec 2024-1:19 pm,

வாழ்க்கையில் ஒருவர் செய்யும் நல்லது, கெட்டதுக்கான பலன்களை வழங்கும் நீதியின் கடவுள்தான் சனி பகவான் (Lord Saturn). நீங்கள் செய்யும் நல்ல விஷயங்களால் உங்களுக்கு நன்மையையும், நீங்கள் செய்யும் தீங்கிற்கு சரியான தண்டனையையும் சனி பகவான் பெற்றுத் தருவார்.

சனி பகவான் ஒரு ராசியில் இருந்து வேறு ராசிக்கு மாற இரண்டரை ஆண்டுகள் ஆகும் (Saturn Transit 2025). 12 ராசிகளுக்கும் சனி பகவான் முழுமையாக ஒரு சுழற்சி மேற்கொள்ள ஏறத்தாழ 30 ஆண்டுகள் எடுக்கும். 

அந்த வகையில் சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று மீன ராசிக்கு (Pisces) மாற இருக்கிறார். சனி பகவான் 2027ஆம் ஆண்டு வரை மீனத்தில் நீடிப்பார். குரு பகவானே மீனம் ராசிக்கு உகந்தவர் ஆவார்.

சனி பகவான் 2027ஆம் ஆண்டு வரை மூன்று நட்சத்திரங்களுக்கும் மாறுவார். இதனால், அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த மூன்று ராசியினருக்கும் மிகப்பெரிய தலைவலியை கொடுக்கும். சனி பகவானால் இவர்களின் வாழ்வு மிகவும் கடினமானதாக மாறும்.

மேஷம் (Aries): வரும் புத்தாண்டு உங்களுக்கு சற்று கடினமாகவே தொடங்கும். பிள்ளைகளின் கல்வியில் பாதிப்பு் வரலாம். கணவன் - மனைவி இடையேயும் பிரச்னை உருவாகி வீட்டில் அமைதியின்மை ஏற்படலாம். சொத்து பாதிப்பும் உங்களுக்கு ஏற்படலாம். பணி வாழ்விலும் உங்களுக்கு முதலாளியுடன் பிரச்னை ஏற்பட்டு, வேலையும் ஆபத்தில் சிக்கலாம். சனி பகவான் உக்கிரத்தை குறைக்க சனிக்கிழமைகளில் கருப்பு நிற நாய்களுக்கு உணவளியுங்கள். பசியால் வாடுபவர்களுக்கும் உணவளியுங்கள்.

சிம்மம் (Leo): வரும் மார்ச் மாதம் முதல் உங்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்னை வரலாம். நீங்கள் கடினமாக உழைத்தாலும் அதற்கான பலன்கள் உங்களுக்கு கிடைக்காது. தெரிந்தோ, தெரியாமலோ சமூகத்தில் உள்ள  உங்களின் நன்மதிப்பை நீங்களே கெடுத்துக்கொள்வீர்கள். பக்கத்துவீட்டுக்காரர்களிடம் பிரச்னை வரலாம், நீதிமன்றம் வரைக்கும் கூட பிரச்னை ஏற்படலாம். சனிக்கிழமை தோறும் கோயிலுக்கு சென்று சனி பகவானை வழிபடுங்கள். விளக்கேற்றி, பசியில் வாடுபவர்களுக்கு உணவளித்தால் நிவாரணம் உண்டாகலாம்.

கும்பம் (Aquarius): இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படலாம். புதிய வேலையை தேடினால் கூட அதில் உங்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படாது, இதனால் கடும் அதிருப்தி உண்டாகும். உங்களின் குடும்ப உறுப்பினர் ஒருவர் நோயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உங்களின் சேமிப்பு மொத்தமாக செலவாகலாம், நீங்கள் கடனில் தத்தளிக்கலாம். சனியின் கோபத்தை தடுக்க ஏழை வீட்டு பெண்களின் திருமணத்திற்கு நன்கொடை அளியுங்கள். தேவைப்படுவோருக்கு உணவு, உடை ஆகிய தானங்களை வழங்குங்கள்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள், கணிப்புகளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News உறுதிசெய்யவில்லை)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link