30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசிக்கு வரும் சனி: இந்த ராசிகளுக்கு ராஜ யோகம்
மேஷம்: உங்களின் பொருளாதார நிலை மேம்படும்.பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு நல்ல அனுபவம் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் தரக்கூடிய அமோக வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: உங்களின் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உங்கள் வாழ்க்கையை முன்னேற்றம் தரும் அளவிற்கான பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் நீங்கள் முயலக்கூடிய எந்த ஒரு தடைப்பட்ட வேலையும் சிறப்பாக நடந்து முடியும்.
சிம்மம்: இந்த சனி பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக இருக்கும். கடின உழைப்புக்கு அதற்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக இருந்தாலும், பணியிடத்தில் மேன்மை தருவதான அற்புத பலன்கள் தொடர்ந்து கிடைக்கும்.
கன்னி: சாதகமான பலன்கள் தருவதாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்காக முயன்று வரக்கூடிய இளைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள், வெற்றி கிடைக்கும். உங்களின் நிதி நிலைமை மேம்படும். திடீர் பண வரவு, பண ஆதாயம் கிடைக்கும்.
துலாம்: மாணவர்களுக்கு கல்வி மேம்பாடு இருக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமைவதோடு, இலக்கை சிறப்பாக அடைய வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். உங்களுக்கு புதிய நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)