கும்பத்தில் சனி உதயம்... 12 ராசிகளுக்குமான பலன்கள்... தடைகள், பிரச்சனைகள் நீங்கும்
மேஷ ராசியினர் சனி உதயத்தினால், வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை தொடங்குவார்கள். வருமான வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
ரிஷப ராசியினருக்கு சனி உதயம் கலவையான பலன்களை கொடுக்கும். கடினமாக உழைத்தால் தான் வெற்றி கிடைக்கும். நிதிநிலை மேம்பட நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டி இருக்கும். இருப்பினும் முயற்சி பலன் அளிக்கும்.
மிதுன ராசியினருக்கு சனி உதயம் அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக அமையும். திட்டமிட்டபடி பணிகள் அனைத்தும் குறித்த நேரத்தில் நிறைவடையும். சனிபகவானின் அருள் பரிபூரணமாக இருக்கும். உழைப்பின் பலன் கிடைக்கும்.
கடக ராசியினருக்கு சனி உதயம் காரணமாக சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படலாம். எனினும் திட்டமிட்டு வேலை செய்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பிக்கலாம்.
சிம்ம ராசியினருக்கு சனியின் உதயம் சாதகமாக இருக்காது. சனி உங்களை சிறிது காலம் சோதிப்பார். எனினும், கர்ம வினைகள் மீது நம்பிக்கை வைத்து பொறுமையாக இருங்கள். சிக்கல்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
கன்னி ராசியினருக்கு சனியின் உதயம் நிதி பலன்களை அள்ளிக் கொடுக்கும். குழந்தைகள் தொடர்பாக மனதில் இருந்து வந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.
துலாம் ராசியினருக்கு சனியின் உதயம் கொஞ்சம் சிக்கல்களை கொடுப்பதாக இருக்கும். முடிவுகள் எடுக்கும் போது அவசரப்படாமல் இருப்பதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வயதில் மூத்தவர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
விருச்சிக ராசியினருக்கு சனி பகவானின் உதயம் வெற்றிகளை கொடுப்பதாக இருக்கும். மனதிற்குப் பிடித்த இடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும்.
தனுசு ராசியினருக்கு சனியின் உதயம், பிரச்சனைகளை தீர்க்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மகர ராசியினருக்கு சனியின் உதயம் கலவையான பலன்களை கொடுக்கும். சிறிய அளவில் நிதி இழப்பு ஏற்படலாம். ஆனால் அதனால் அதனால் அவ்வளவு பெரிய பாதிப்பு இருக்காது. பணியிடத்தில் அதிக பொறுப்பு காரணமாக பணி சுமை அதிகரிக்கும்.
கும்ப ராசியினருக்கு சனி என்பது நல்ல பலன்களை கொடுக்காது. பணம் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லை என்றால் இழப்புகளை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
மீன ராசியினருக்கு சனியின் உதயத்தால், செலவுகள் ஏற்படலாம். வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் மனதில் சஞ்சலம் ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருப்பதால் சிக்கல்களை தவிர்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.