கும்பத்தில் வக்ரகதியை மாற்றும் சனீஸ்வரர்! நாலு ராசிகளுக்கு நல்லது செய்யப்போகும் சனியின் வக்ரநிவர்த்தி!
ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனீஸ்வரரின் இயக்கமும், சஞ்சாரமும், ராசிப் பெயர்ச்சியும் மிகவும் முக்கியமானவை
தற்போது கும்பத்தில் இருக்கும் சனீஸ்வரர் வழக்கத்திற்கு மாறாக எதிர்திசையில் இயங்குகிறார். இதனை வக்ர இயக்கம் என்று சொல்வார்கள்
சனியின் சொந்த ராசியான கும்பத்தில் இருக்கும் அவர், வக்ரத்தில் இருக்கும் போது கொடுக்கும் பலனுக்கும், இயக்கத்தை இயல்பாக மாற்றிய பிறகு கொடுக்கும் பலன்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கும்
ஏழரை சனி நடப்பவர்கள் மட்டுமல்ல, அனைத்து ராசியினருக்கும் சனியின் வக்ர நிவர்த்தி பலன்கள் மாறுபடும். நவம்பர் 15ம் தேதி கும்பத்தில் வக்ர நிவர்த்தி பெறும் சனீஸ்வரர் நான்கு ராசிகளுக்கு நன்மைகள் செய்வார். அந்த ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்...
சனியின் சஞ்சாரத்தில் மாற்றம் கடக ராசியினருக்கு சுபமாக அமையும். உங்களின் வேலைத் துறையில் வெற்றியை அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமான காலம், ஒரு பெரிய ஒப்பந்தம் முடிவடையும், அது லாபம் தரும். வேலையிடத்திலும் குடும்பத்திலும் நிம்மதி நிலவும்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி தேவன் வக்ரத்தில் இருந்து வெளிவருவது நன்மை பயக்கும். இரும்பு, எண்ணெய் சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுவடையும். நீண்ட நாட்களாக இருந்த நோய் பாதிப்பில் இருந்து நிவாரணம் பெறலாம். எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும்
கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலை மேம்படும். நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால் அதில் வெற்றி கிடைக்கும். வசதிகள் பெருகும். சில நல்ல செய்திகள் வந்து சேரும், அது உங்கள் மனதை மகிழ்விக்கும். ஏதேனும் கடன் இருந்தால், அதையும் தீர்க்கலாம்.
மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பண பலன்கள் அதிகரிக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களும் விரும்பிய வேலை கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும்
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது