Shocking: காய்கறிகளால் கூட பக்க விளைவுகள் வருமா? அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்
காளான்களில் வைட்டமின் டி அதிகப்படியாக காணப்படுகிறது. ஆனால் சிலருக்கு காளான்களை சாப்பிட்ட பிறகு தோலில் தடிப்புகள் வரும். உணவில் காளான்களைச் சேர்ப்பது சிலருக்கு ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும். ஆனால், காளான்களை பச்சையாக சாப்பிடும்போதுதான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
எல்லோருக்கும் கேரட் பிடித்தமான காயாகும். ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் நம் சருமம் ஆரஞ்சு நிறமாக மாறும். கேரட்டில் பீட்டா கரோட்டின் நிறைந்திருப்பதால், அதிக கேரட் சாப்பிடுவதன் மூலம், தோல் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக மாறக்கூடும். கேரட் மட்டுமல்ல, அதிகமாக பூசணி மற்றும் சர்க்கரைவள்ளி கிழங்க்கு ஆகியவற்றை சாப்பிடுவதாலும் சருமத்தின் நிறம் மாறும்.
அதிகமாக பீட்ரூட் சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் மாறும். இளஞ்சிவப்பு நிறத்தைக் கண்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால் பீதியடைய ஒன்றுமில்லை, இது பீட்ரூட்டின் ஒரு பக்க விளைவாகும்.
பீட்டா கரோட்டின் போலவே, வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதும் நமது சிறுநீரின் நிறத்தை மாற்றும். ஒரே நாளில் வைட்டமின் சி அதிகமாக உட்கொள்வதால், சிறுநீரின் தோற்றம் மாறுபடுகிறது. நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும்போதும் சிறுநீரின் நிறம் மாறுகிறது. எனவே நாம் அதிக வைட்டமின் சி எடுத்துக் கொள்ளும்போது, அதனுடன் ஏராளமான தண்ணீரை குடிக்க வேண்டும்.
காலிஃபிளவர் மற்றும் இந்த வகையின் பிற காய்கறிகளை அதிகமாக உட்கொள்வதால், இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. முட்டைக்கோசு ஆரோக்கியமான காய் என்றாலும், அதிகமாக உட்கொள்ளும்போது, அது ஜீரணிக்க கடினமானதாக கருதப்படுகின்றது. குறிப்பாக பச்சையாக சாப்பிட்டால் அது மிகவும் தீங்கு விளைவிக்கும். இதில் ரஃபினோஸ் உள்ளது, இதை நம் உடலால் எளிதில் ஜீரணிக்க முடியாது. இதனால் நமக்கு வயிற்று வலியும் ஏற்பட வாய்ப்புள்ளது.