27 வருடங்களுக்கு பிறகு இணைந்த சூர்ய வம்சம் ஜோடி! வைரல் போட்டோஸ்..

Tue, 16 Jul 2024-1:32 pm,
Siddharth 40 movie

தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கு சித்தார்த்த், தற்போது தனது 40வது படத்தில் நடிக்க இருக்கிறார். இவரை, தமிழ் ரசிகர்கள் தற்போது வெளியான இந்தியன் 2 படத்தில் பார்த்தனர். 

Siddharth 40 movie

சித்தார்த்தின் இந்த 40வது படத்தை ஸ்ரீ கணேஷ் இயகுகிறார். இந்த படத்தின் பூஜை தற்போது நடைப்பெற்றது.

Siddharth 40 movie

‘சித்தார்த் 40’ பட பூஜை விழாவில் மீதா ரகுநாத் கலந்து கொண்டார். குட் நைட் படம் மூலம் பிரபலமான இவர், தற்போது இந்த படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சைத்ரா அச்சரும் நடிக்கிறார்.

தான் நடிக்கும் படங்களை பிரத்யேகமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் சித்தார்த், ‘சித்தா’ படத்தில் நடித்ததற்காக பலர் மத்தியில் பாராட்டு பெற்றார். அந்த வகையில் இந்த படத்தையும் நல்ல முறையில் தேர்ந்தெடுத்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தார்த்தின் 40வது படத்தை, 8 தோட்டாக்கள் படத்தை டைரக்டு செய்த ஸ்ரீ கணேஷ் இயக்கியிருக்கிறார். கொரோனா பேப்பர்ஸ், குருதி ஆட்டம், 8 எம் எம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

இப்படம், எமோஷனல் த்ரில்லராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இப்படம் மீது ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. 

சித்தார்த் 40 படத்தின் பூஜை விழா நேற்று (ஜூலை 15) நடைப்பெற்றது இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். 

1997ஆம் ஆண்டு வெளியான ‘சூர்ய வம்சம்’ படத்தில் இணைந்து நடித்த சரத்குமார்-தேவையானி கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் மீண்டும் கைக்கோர்த்திருக்கின்றனர். இதனால் 90s கிட்ஸ் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link