Siddharth: காதல் வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டவருக்கு ‘டக்கர்’ ரிப்ளை கொடுத்த பிரபல நடிகர்..!

Fri, 02 Jun 2023-4:22 pm,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர், சித்தார்த். இவர் நடித்துள்ள ’டக்கர்’ என்ற படம் இம்மாதம் திரைக்கு வர இருக்கிறது. 

’டக்கர்’ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் சித்தார்த் கலந்து கொண்டு வருகிறார். 

தெலுங்கிலும் டக்கர் படம் வெளியாகிறது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவரிடம் ஒரு நபர், வரம்பு மீறிய ஒரு கேள்வியை கேட்டார். ”சினிமாவில் வெற்றி பெறுவது போல உங்கள் காதல் ஏன் நிஜத்தில் வெற்றி பெறுவதில்லை?” என சித்தார்த்திடம் அந்த நபர் கேள்வியெழுப்பினார். 

அதற்கு சித்தார்த், “இதைப் பற்றி நான் ஒரு முறை கூட யோசித்ததில்லை. ஆனால் உங்களுக்கு என் காதல் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை உள்ளது போல இருக்கிறது. அதனால், இதுகுறித்த நாம் இருவரும் தனியாக சென்று உரையாடலாம். இங்கிருக்கும் அனைவரும் டக்கர் படம் குறித்து தெரிந்து கொள்ள வந்துள்ளனர். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்” என கூறினார். சித்தார்த்தின் இந்த பதில், பலரையும் கவர்ந்துள்ளது. சித்தார்த்தும் நடிகை அதிதியும் காதலித்து வருவதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 

சித்தார்த் இந்தியன் 2 படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

சித்தார்த் நடித்துள்ள டக்கர் படம், இம்மாதம் 9ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link